சற்று முன்
Home / இந்தியா (page 10)

இந்தியா

அ.தி.மு.கவா… தி.மு.கவா..? – புதிய தலைமுறை கருத்துக் கணிப்பு!

வரவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் எந்த கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்பது குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சி மற்றும் ஏ.பி.டி. நிறுவனம் இணைந்து நடத்தியுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், அ.தி.மு.க கூட்டணி 164 இடங்களிலும், தி.மு.க கூட்டணி 66 இடங்களிலும் வெற்றி பெறும் எனத் தெரியவந்துள்ளது. மேலும், அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் இந்த ...

Read More »

இணையப் போராளிகளுக்கு வைகோ உருக்கமான வேண்டுகோள்

மக்கள் நலக் கூட்டணியின் இணைய தளப் பக்கத்திற்காக, வீடியோ பதிவு ஒன்றில் பேசியிருந்தார் வைகோ. அந்தப் பதிவில், ” கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் வரும் தகவல்களை எல்லாம் நம்பாதீர்கள். பெரு மழையில் சென்னை சிக்குண்டபோது, செல்போன் புரட்சியாளர்கள்தான் மக்களைக் காத்தார்கள். அவர்கள்தான் தமிழ்நாட்டில் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரப்போகிறவர்கள். என் போன்றவர்கள் செய்ய ...

Read More »

விஜயகாந்தையும் ராமதாசையும் விமர்சிக்கவேண்டாம் – சீமான் உத்தரவால் குழம்பிய தொண்டர்கள்

‘சட்டசபைத் தேர்தலில் பா.ம.கவையும் தே.மு.தி.கவையும் விமர்சிக்கப் போவதில்லை’ என அதிரடியாக முடிவெடுத்திருக்கிறார் சீமான். நேற்று கட்சி நிர்வாகிகளிடம் அவர் பேசிய பேச்சு அதிர்வலையைக் கிளப்பியிருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய சீமான், கூட்டம் முடிந்ததும் நிர்வாகிகளை சந்தித்துப் பேசினார். ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளைப் பற்றி நம்மிடம் விவரித்த நாம் ...

Read More »

தமிழகத்தில் பா.ஜ.க மூன்றாவது சக்தி! – சொல்கிறார் மோடி

தமிழகத்தில் பா.ஜ.க 3-வது சக்தியாக உருவெடுத்துள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 16-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல், மாநில கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ள தேசிய கட்சிகளின் தலைவர்களும் தமிழகம் வந்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல், பிரதமர் ...

Read More »

தேர்தல் களத்தில் 234 தொகுதிகளிலும் 3,785 வேட்பாளர்கள்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் 3 ஆயிரத்து 785 பேர் போட்டியிடுகின்றனர். தமிழக சட்டப்பேரவைக்கு வரும் 16-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது. அதன்படி, 234 தொகுதிகளிலும் 3 ஆயிரத்து 785 பேர் போட்டியிடுகின்றனர். இதில் 3 ஆயிரத்து 462 பேர் ஆண்கள். 321 பேர் ...

Read More »

கூட்டணி ஆட்சி, முழு மதுவிலக்கு – மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் உறுதி!

மக்கள் நலக்கூட்டணியின் தேர்தல் அறிக்கை சென்னையில் இன்று வெளியிடப்பட்டது. சென்னையில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்,விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தேர்தல் அறிக்கையைக் கூட்டாக ...

Read More »

வைகோவின் விலகல் – கருத்துச் சொல்லும் தலைவர்கள்

வைகோ தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மக்கள் நலக்கூட்டணி தலைவர்களும், முதல்வராகும் வாய்ப்பு கிடைக்காததால் வைகோ,  போட்டியிலிருந்து விலகியிருக்கலாம் என்று திமுக உள்ளிட்ட கட்சிகளும் கருத்து தெரிவித்துள்ளன. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், ...

Read More »

தேர்தலிற்கு குட்பை – போட்டியிலிருந்து வைகோ வெளியேற்றம் – பரபரப்பில் மக்கள் நலக் கூட்டணி

சட்டப் பேரவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திடீரென அறிவித்துள்ளார். கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் வைகோ இன்று மனுதாக்கல் செய்வார் என்று எதிர்பார்த்த நிலையில் திடீரென அவர் வேட்பு மனுதாக்கல் செய்யவில்லை. மதிமுக சார்பில் மாற்று வேட்பாளர் விநாயக் ரமேஷ் கோவில்பட்டி தொகுதியில் மனுதாக்கல் செய்தார். ஏன் மனுதாக்கல் செய்யவில்லை ...

Read More »

இலங்கைத் தமிழர்களிற்கு இரட்டைக் குடியுரிமை – ஜெயலலிதா

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுப்போம் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து ஜெயலலிதா கடந்த 9-ம் திகதி முதல் மண்டலம் வாரியாக பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி திருச்சி – சென்னை பைபாஸ் சாலையில் உள்ள திருச்சி ...

Read More »

பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலை பரிந்துரையை நிராகரித்தது மத்திய அரசு

ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவை மத்திய அரசு நிராகரித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகள் இடைவெளியில் ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவை மத்திய அரசு இரண்டாவது முறையாக நிராகரித்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது. முதல் கடிதம் கடந்த 2014-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com