சற்று முன்
Home / Author Archives: kamal Raj

Author Archives: kamal Raj

கஜேந்திரன்களின் எதேச்சதிகாரம்; முன்னணியின் சிதைவு?

“நந்தவனத்தில் ஓர் ஆண்டி – அவன்நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிகொண்டு வந்தான் ஒரு தோண்டி – மெத்தக்கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி” இப்படி ஆரம்பிக்கும் நாட்டார் பாடலொன்று தமிழில் மிகவும் பிரபலமானது. கடுவெளிச் சித்தர் எழுதியது. “…நீ விரும்பி வேண்டி காத்திருந்து பெற்ற ஒரு விடயத்தை தவறான வகையில் பயன்படுத்தி வீணாக்கிக் கொள்கிறாய்…” என்பதுதான் இந்தப் பாடலின் ...

Read More »

எந்த அடிப்படையில் துரோகிப் பட்டங்கள் வழங்கப்படுகின்றன ?

எந்த அடிப்படையில் எதை ஆதராமாகக் கொண்டு இந்த துரோகி நிகழ்ச்சி நிரல் பட்டங்கள் வழங்கப்படுகின்றன ? இதன் மூலம் எதை சாதிக்கின்றீர்கள். என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் தான் சார்ந்த கட்சி பிரதிநிதிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார். ஈழத்தின் புகழ் பூத்த பொருளியல் ஆசானும் பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் ...

Read More »

முன்னணியின் பதவிகலிருந்து தூக்கி வீசப்பட்ட மணி!

தமிழ் அரசியலில் இளைஞர்களால் கவர்ந்து இழுக்கப்பட்ட சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளிலிருந்து நீக்க கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது. நேற்று வியாழக்கிழமை இரவு கூடிய மத்திய குழு, சட்டத்தரணி வி.மணிவண்ணனை முன்னணியின் பதவி நிலைகளிலிருந்து நீக்கும் இந்த முடிவை எடுத்தது. இந்தக் கூட்டத்துக்கு ...

Read More »

3 வாக்களர்களுக்கு ஒரு வாக்கெடுப்பு நிலையம்

இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் 03 வாக்காளர்களுக்கு ஒரு வாக்களிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் மாந்தீவு தொழுநோயாளர் வைத்தியசாலை மட்டக்களப்பு வாவியின் நடுவே மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு மேற்காக அமைந்துள்ள வைத்தியசாலையாகும். இது பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட தொழுநோய் வைத்தியசாலையாகும். தொழுநோய் ...

Read More »

ஓகஸ்ட் 10 முதல் பாடசாலைக்கு மாணவர்கள் சமூகமளிக்கும் முறை

தற்போது விடுமுறை வழங்கப்பட்டுள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகளும் ஓகஸ்ட் 10 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாடசாலையிலுள்ள ஒவ்வொரு தரத்திலும் கல்வி பயிலும் மாணவர்கள் எந்தெந்த தினங்களில் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அந்த வகையில், 5,10,11,12,13 தரங்களில் உள்ள மாணவர்கள் ஐந்து நாட்களும் பாடசாலைக்கு சமூகமளிக்க ...

Read More »

வாக்காளர் அட்டைகளை பணம் கொடுத்து பெற முயன்ற இருவர் கைது

பேருவளை பகுதியில் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை பணம் கொடுத்து பெற முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் ஐவர், 5000 ரூபாயை கொடுத்து வாக்காளர் அட்டைகளை பெற முயன்ற சந்தர்ப்பத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இருவர் தப்பியோடியுள்ளனர். மேலும் சந்தேகநபர்கள் பயன்படுத்திய காரொன்றும் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதேவேளை தேர்தல் விதிமுறைகளை மீறி செயற்பாடுகளை ...

Read More »

புதிய நாடாளுமன்றம் 20ஆம் திகதி கூடுகிறது

புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடரை எதிர்வரும் 20 ஆம் திகதி கூட்டுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வர்தமானி அறிவித்தல் ஜனாதிபதி செயலாளர் பீ.பி ஜயசுந்தரவின் கையெழுத்துடன் நேற்று (திங்கட்கிழமை) நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தில் உள்ள அதிகாரங்களுக்கு அமைய, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்ற அமர்வு ...

Read More »

தேர்தலில் சுமார் 80 சதவித வாக்குப்பதிவு இடம்பெறும்

2020 பொதுத் தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தலில் சுமார் 80 சதவித வாக்குப்பதிவு இடம்பெறும் என்று தாம் எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் ...

Read More »

மஞ்சத் திருவிழா

யாழ்ப்பாணம் – நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவின் 10 ஆம் திருவிழாவான மஞ்சத் திருவிழா இன்று(03.08.2020) மாலை வெகு சிறப்பாக இடம்பெற்றது.  படங்கள் – ஐ .சிவசாந்தன்

Read More »

பேனாக்களை விநியோகிக்க வேண்டாம்

கட்சிகளின் சின்னங்கள் , வேட்பாளர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட பேனாக்களை வாக்களர்களுக்கு விநியோகிக்க வேண்டாம் என கட்சிகளின் பிரதிநிதிகளிடம் யாழ்.மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் இ.கி.அமல்ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற கட்சி பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போதே அவ்வாறு கோரிக்கை விடுத்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், இம்முறை சுகாதார நடைமுறைகளை பின்பற்றும் முகமாக வாக்காளர்கள் கறுப்பு ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com