சற்று முன்
Home / Author Archives: Jaseek (page 10)

Author Archives: Jaseek

ஒற்றுமை என்பது செயலில் வர வேண்டும் – கஜேந்திரகுமார்

நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகளின் பின்னர், ஒற்றுமைக்கான கோசங்களை விக்கினேஷ்வரன் அவர்களும் சுமந்திரன் அவர்களும் முன்வைத்திருக்கிறார்கள். ஆனால் அந்த அழைப்பில் பல சந்தேகங்கள் இருக்கின்றன என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய தமிழ் வானொலி ஒன்றுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை வழங்கிய நேர்காணலிலேயே மேற்படி விடயத்தை தெளிவுபடுத்தியுள்ளார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். ...

Read More »

கட்சித் தலைமைப் பதவி பத்திரிகையாளர் மாநாட்டில் தீர்மானிக்கும் விடயமல்ல – சுமந்திரன் சிறிதரனுக்கு மாவை சாட்டைப் பதில்

தமிழரசுக் கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் ஏனைய பதவிப் பொறுப்புக்கள் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் மாநாடும், பொதுக்குழுவுமே கட்சி யாப்பின்படி தீர்மானங்களை எடுக்கவல்லதாகும். பொதுவெளியில், பத்திரிகையாளர் மாநாட்டில் மேற்குறித்த பதவிப் பொறுப்புக்கள் தீர்மானிக்கப்படுவதில்லை என்பதனைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று கட்சியின் தலைவர் மாவை. சோ.சேனாதிராசா தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் அரசுக் ...

Read More »

தமிழரசுக் கட்சித் தலைமையை என்னிடம் தாருங்கள் – சிறிதரனுக்கு வந்த ஆசை

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள தான் தயாராக உள்ளேன் என்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். கிளிநொச்சி தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் பேதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- தமிழரசுக் கட்சியின் தலைமைப் பொறுப்பு ...

Read More »

மஹிந்த நாளை பிரதமராக பதவியேற்பு!!

புதிய அரசாங்கத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்வ நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியவில் களனி ரஜமஹா விகாரையில் பிரதமராகப் பதவியேற்கவுள்ளார். பதவியேற்பு விழா ஜனாதிபதி கோத்தா பய ராஜபக்ச முன்னிலையில் நாளை காலை களனி ரஜமஹா விகாரையில் இடம்பெறவுள்ளது. குறித்த பிரதேசத்தில் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள் ளப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. ...

Read More »

பாராளுமன்ற உறுப்பினராகிறார் முன்னாள் ஆளுநர் சுரேன் இராகவன்

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் 14 தேசியப் பட்டியல் ஆசனங்கள் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டோரின் விவரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பரிந்துரைக்கப்பட்டுள்ளார். பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், சாஹர காரியவசம், அஜித் நிவாட் ஹப்ரால், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, ...

Read More »

கைகள், கால்கள் கட்டப்பட்டு முகம் கறுப்புத் துணியால் முடப்பட்டது மாமனிதர் ரவிராஜின் உருவச்சிலை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் இ.ரவிராஜின் உருவ சிலையின் முக பகுதி கறுப்பு துணியால் மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் இ.ரவிராஜின் பாரியார் சசிகலா தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது விருப்பு வாக்கு எண்ணிக்கையில் ...

Read More »

இவர்கள்தான் அந்த 196 எம்.பிக்கள்

நடைபெற்று முடிந்த 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து மாவட்டங்களுக்குமான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் தேர்தலில் போட்டியிட்ட பாராளுமன்றத்திற்கு மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்பட்ட 196 உறுப்பினர்களின் விபரங்கள் பின்வருமாறு, யாழ் மாவட்டம் இலங்கை தமிழரசு கட்சி சிவஞானம் ஶ்ரீதரன் – 35,884 எம்.ஏ சுமந்திரன் – 27,834 ...

Read More »

முன்னணியில் தேசியப்பட்டியல் ஆசனம் கிழக்கிற்கு ?

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பட்டியல் மூலமான நியமன எம்.பி கிழக்கு மாகாணத்துக்கு அதுவும் குறிப்பாக அம்பாறை அல்லது திருகோணமலைக்கு வழங்கப்பட்டு வடக்கு கிழக்கு குரல்கள் உறுதிசெயப்படுவது காலத்தின் தேவையென குரல்கள் எழுந்துள்ளன. இதன் மூலம் கட்சியின் யாழ்ப்பாண மைய அரசியல் நீக்கத்துக்கான தூரநோக்கான செயற்பாடாக அமையும் என்ற கோரிக்கையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிடம் முன்வைக்கப்பட்டுள்ளது. ...

Read More »

வாக்களிப்பு பூர்த்தி – யாழில் 67.72 வீத வாக்குப் பதிவாகியது

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சுமூகமான முறையில் பொதுத் தேர்தல் வாக்களிப்பு நிறைவடைந்த நிலையில் வாக்குப்பெட்டிகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் உள்ள வாக்குகள் எண்ணும் மத்திய நிலையத்துக்கு எடுத்து வரப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 4 லட்சத்து 79 ஆயிரத்து 848 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளார்கள். இவற்றில் தபால்மூல வாக்களிப்பு நீங்கலாக 4 லட்சத்து 58 ஆயிரத்து 345 ...

Read More »

நஞ்சு மாலைகளை அணிந்தவர்களின் இலக்கு வெற்றி பெற்ற பின்னரே மாலை அணிவோம்

நச்சு மாலைகளை கழுத்தில் அணிந்து போராடி மடிந்தவர்களின் இலக்கு வெற்றி பெற்று எம்மினத்திற்கு விடிவு கிடைத்த பின்னரே மேடைகளில் மாலை அணிவோம் என சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்தார். யாழில் நேற்றைய தினம் நடைபெற்ற பிரச்சார கூட்டமொன்றில் உரையாற்ற முற்பட்ட போது, நிகழ்வினை ஒழுங்கு செய்தவர்களில் ஒருவர் மலர் மாலை அணிவிக்க முற்பட்ட போது கழுத்தில் ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com