ஜேவிபி மற்றும் ஈபிடிபியுடன் இணைந்து வல்வெட்டித்துறை நகரசபையைக் கைப்பற்ற சுமந்திரன் சதித்திட்டம் தீட்டிவருவதாக வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் கவலை வெளியிட்டிருக்கிறார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தலைவரின் வல்வெட்டித்துறை மண்ணை வென்றுவிட்டோம் என பலர் தம்பட்டம் அடிக்க திட்டமிட்டிருந்த நிலையில் தமிழ்த்தேசியப் பேரவையின் தலைமை வேட்பாளராக களமிறங்கிய சிவாஜிலிங்கம் வல்வெட்டித்துறையில் வெற்றிபெற்று தமிழ்த்தேசியத்தை நிலைநாட்டினார்.
இந்நிலையில் வல்வெட்டித்துறையில் மிகமோசமாக படுதோல்வியடைந்த இலங்கை தமிழரசுக் கட்சி ஜேவிபி மற்றும் ஈபிடிபியின் ஆதரவின் மூலம் வல்வெட்டித்துறை நகரசபையைக் கைப்பற்ற சுமந்திரன் இரகசியப் பேச்சுக்களில் ஈடுபட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு கட்டியம் கூறுவதுபோல இன்று யாழ் ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சிவிகே. சிவஞானம் ஜனநாயகக் கட்டமைப்பில் யாரும் யாருக்கும் வாக்களிக்கலாம். அதனை யாரும் கேள்விக்குட்படுத்த முடியாது. ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி ஆதரவாக வாக்களித்தாலும் ஏற்றுக்கொள்வோம்.அதேபோன்று தேசிய மக்கள் சக்தி ஆதரவாக வாக்களித்தாலும் ஏற்றுக்கொள்வோம் என தெரிவித்திருந்தார்.
இதேவேளை கடந்த உள்ளூராட்சிக்காலத்திலும் சுமந்திரனின் சதியால் 4இற்கு மேற்பட்ட தடவை சபை குழப்பப்பட்டு தொங்குசபையாக மாறி தவிசாளர்கள் மாற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment