ஈபிடிபி, என்பிபி ஆதரவளித்தால் ஏற்போம் என்கிறார் பதில் தலைவர் சிவிகே


ஜனநாயகக் கட்டமைப்பில் யாரும் யாருக்கும் வாக்களிக்கலாம். அதனை யாரும் கேள்விக்குட்படுத்த முடியாது. ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி ஆதரவாக வாக்களித்தாலும் ஏற்றுக்கொள்வோம்.அதேபோன்று தேசிய மக்கள் சக்தி ஆதரவாக வாக்களித்தாலும் ஏற்றுக்கொள்வோம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.


யாழ்.ஊடக அமையத்தில் இன்று ஊடகவியலாளர்களிடையே பேசிய அவர் தமிழ் கட்சிகள் அனைத்திடமும் ஆதரவளிக்க தமிழரசுக்கட்சி கோரியுள்ளது. ஜனநாயகத்தின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி ஆதரித்து வாக்களித்தால் மறுதலிக்க முடியாது. எனினும் தாங்கள் அறிந்தவரை தேசிய மக்கள் சக்தி தமிழரசுக்கட்சிக்கு எதிராகவே உள்ளுராட்சி மன்றங்களில் வாக்களிக்கவுள்ளதாக அறிந்துள்ளதாகவும் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.


நாம் சபைகளில்  ஆட்சி அமைப்பது தொடர்பில் தமிழ் தரப்பிலுள்ள கட்சிகளுடன் பேசியுள்ளேன். அதன்படி இன்று எமது தேசியப் பரப்பில் இருக்கும் கட்சித் தலைவர்களுக்கும் குறிப்பாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட ஏனைய தரப்பினரது ஆதரவு கிடைக்கும் என்று நம்புகின்றேன். ஏனையோர் கூறுவது போன்று எமது கட்சி எந்தவொரு ஒற்றுமை இணக்கப்பாட்டையும் குழப்பியது கிடையாது எனவும் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.


இதனிடையே பெரும்பான்மை ஆசனங்களை பெற்ற சபைகளில் தமிழ் மக்கள் பேரவை பேரில் போட்டியிட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆட்சியமைப்பதை தமிழரசுக்கட்சி குழப்பிவருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. 

Post a Comment

Previous Post Next Post