யாழ் தேர்தல் மாவட்டத்தில் 44 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் போட்டி


எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 46 வேட்புமனுகள் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களால் கையளிக்கபட்ட நிலையில் இரண்டு சுயேட்சை குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

வேட்புமனு தாக்கலுக்கான காலக்கெடு இன்று நண்பகல் நிறைவடைந்த நிலையில் வேட்புமனுக்கள் தொடர்பாக ஆட்சேபனைகளை முன்வைக்க அவகாசம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் இரண்டு சுயேட்சை குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

இம்முறை பாராளுமன்ற தேர்தலில் 44 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் இம்முறை யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் களமிறங்கவுள்ளன.




Post a Comment

Previous Post Next Post