யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வருகை விரிவுரையாளரும், பத்தி எழுத்தாளரும் அரசியல் சமூக செயற்பாட்டாளருமான ஐ.வி.மகாசேனன் எழுதிய இலங்கை ஜனாதிபதித் தேர்தல்களில் ஈழத்தமிழர் அரசியல் நூல் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் 20.08.2024 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 03.00 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட கருத்தரங்கு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
யாழ்ப்பணப் பல்கலைக்கழக அரசறிவியல்துறைத் தலைவர் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் தலைமையில் நடைபெறும் நூல் வெளியீட்டு நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராமும் சிறப்பு விருந்தினராக சிவபூமி அறக்கட்டளைத் தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகனும் கலந்துகொள்ளவுள்ளதோடு நூல் அறிமுக உரையினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல்துறை வருகை விரிவுரையாளர் சி.அ.யோதிலிங்கமும் நூல் ஆய்வுரையினை அரசியல் ஆய்வாளர் ம.நிலாந்தனும் நிகழ்த்தவுள்ளனர். நூலிலை இந்தியாவின் பிரபலமான வெளியீட்டகமான டிஸ்கவரி பப்பிளிகேசன் நிறுவனம் வெளியீடு செய்கிறது.
நூலாசிரியர் ஐ.வி.மகாசேனன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அரசறிவியலில் இளங்கலைமானிப் பட்டத்தினையும், பேராதனைப் பல்கலைக்கழத்தில் சர்வதேச உறவுகளில் முதுகலைமானிப் பட்டத்தினையும் பெற்றுள்ளதோடு தற்போது டெல்லி பல்கலைக்கழகத்தில் அரசறிவியலில் முதுகலைமானிப் பட்ட கற்றை நெறியையும் தொடர்ந்துவருகின்றதோடு ஊடகங்களில் தொடர்ச்சியாக சர்வதேச மற்றும் உள்ளூர் அரசியல் குறித்த கட்டுரைகளையும் எழுதிவருவது குறிப்பிடத்தக்கது.
Post a Comment