சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் பேரணி


சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்பாக  கவனயீர்ப்புப் பேரணியானது ஆரம்பிக்கப்பட்டு கிளிநொச்சி மீனாட்சி அம்மன் ஆலயம்  வரை சென்றது. அவ் ஆலயத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நினைவாக சிதறு தேங்காய்  உடைக்கப்பட்டது.

இதன் போது அரசியல் பிரமுகர்கள், சிவில் அமைப்புகள், வர்த்தக சங்கத்தினர், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் மதகுருமார்கள் ஆகியோர் கலந்து கொண்டு உணவுப்பூர்வமாக தமது ஆதரவை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post