சற்று முன்
Home / நம்மவர் சினிமா / திரை விமர்சனம் – மனசுக்குள் ஒரு மழைச்சாரல் – எங்கள் சினிமா என்று கொண்டாடலாம்

திரை விமர்சனம் – மனசுக்குள் ஒரு மழைச்சாரல் – எங்கள் சினிமா என்று கொண்டாடலாம்

14500216_579001978959675_117662550005494864_o
கதாநாயகன் – ஜெராட்

கதாநாயகி – மிதுனா

இசை – சி.சுதர்சன்

ஒளிப்பதிவு – ராஜ்

நகைச்சுவை – சிறி லக்ஸ்மன்

இயக்கம் – விநோதன்

தயாரிப்பு, கதை மற்றும் பாடல் வரிகள் – கு.உயதரூபன்

43

பள்ளிக்காலத்து தனது காதலியைத் தேடி லண்டனில் இருந்து யாழ்ப்பாணம் வருகிறார் நாயகன் ஜெராட்.  குடும்ப சூழ்நிலையால் நாயகன் ஜெராட்டின் காதலை ஏற்க மறுக்கிறார் நாயகி மிதுனா. கடந்த பள்ளிக் காலத்து பசுமையான நினைவுகளோடு நகர்கிறது கதை. ஜெராட்டை மனதார காதலித்தும் தன்னை நம்பியே வாழும்  குடும்பத்தை நடுத்தெருவில் விட்டுவிட்டுச் சென்றுவிட முடியாதென்று ஜெராட்டிடம் காதலை வெளிப்படுத்தாது  தனது முடிவினை மாற்றிக்கொள்ளப்போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார் நாயகி மிதுனா. ஒரு கட்டத்தில் மீண்டும் லண்டனுக்கே புறப்பட்டுச் சென்றுவிட முடிவெடுத்து புறப்படுகின்றார் நாயகன் ஜெராட். லண்டன் புறப்படும்போது எதிர்பாராத விபத்தொன்றில் சிக்கிவிடும்  நாயகன் ஜெராட் காதலியுடன் ஒன்றுசேர்ந்தாரா?   லண்டன் சென்று சேர்ந்தாரா?  விபத்திலிருந்து உயிர் தப்பினாரா? என்பதே படத்தின் இறுதிக்கதை. 72

58

முழுக்க முழுக்க யாழப்பாணப் படமாக இருக்கவேண்டும் என்பதில் அதிகம் சிரத்தை எடுத்திருக்கிறார்கள் படக்குழுவினர். படத்தில் தமிழர் தாயகப் பகுதிகளின் புராதனங்களை பாடல்களினூடும் கதை நிகழ் களங்களினூடும் காட்டிய அவர்கள் எங்கள் கலைகளையும் கலாசாரங்களையும் சுமந்த எங்கள் படமாக வெளிவரவேண்டும் என்பதற்காய் காட்சிகளிலும் சரி கதை வசனங்களிலும் சரி கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.

வெளிநாடு சென்று வாழ்வதால் நாங்கள் எங்கள் பண்பாட்டை, கலாசாரத்தை மறந்துவிடவில்லை. அங்கு நாம் காசு உழைக்கும் இயந்திரங்களாகவே நாலு சுவருக்குள் வாழ்கின்றோம். உறவினர்கள் வீடு செல்லவும் திருவிழா செல்லவும் நண்பர்களோடு ஒன்றாய் சேர்ந்து கதைகள் பேசவும் என எங்கள் சந்தோசங்களை எல்லாம் தொலைத்துவிட்டே காசுக்காக வாழ்க்கின்றோம் என நாயகன் பேசும் வரிகளும் சரி இங்கு மாறிப் போய்விட்ட வழக்கங்களை எண்ணி வேதனையுறுவதிலும் சரி யாதார்த்தத்தை பிரதிபலித்திருக்கிறார்கள்.

நாயகி மிதுனாவின் தந்தையாக வருபவரின் நடிப்பு உணர்வுகளின் வெளிப்பாடாய் சங்கமிக்க நாயகனோடு நகைச்சுவை பேசி திரைக்கதை முழுவதும் வந்து கலக்கியிருக்கிறார் சிறி லக்ஸ்மன். 35

23

அதேபோல், படத்தின் காட்சிகள் அருமையாக செய்திருக்கிறார்கள். 27 வயதேயான ஒளிப்பதிவாளர் ராஜ் பாராட்டப்படவேண்டியவர். நாம் தூக்கிப்பிடித்து தலையில் கொண்டாடும் இந்திய சினிமாவிற்கு நிகராக கமராக்களில் வர்ணம் தீட்டியிருக்கிறார் ராஜ். படத்தின் படத் தொகுப்பினை இயக்குநர் வினோதனே கையாண்டிருக்கிறார். வினோதனின் படங்களிற்கேயுரிய நேர்த்தி படத் தொகுப்பில் தெரிகிறது.

பாடல்களைக் கேட்கும்போது எதுவித சலிப்பும் தெரியவில்லை. பின்னணி இசையாகிலும் சரி பாடல் இசையாகிலும் சரி சுதர்சன் பின்னி எடுத்திருக்கின்றார் என்றுதான் கூறவேண்டும்.

நாயகன் ஜெராட்  குறை சொல்ல முடியாத அளவுக்கு தனது யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகி மிதுனாவின் நடிப்பில் குறையில்லை என்றபோதும் ஒரு சில காட்சிகளில் இயல்பற்ற செயற்கைத்தனம் தெரிக்கின்றது.

படத்தில் ஒரு சில பாத்திரங்களின் நடிப்பில் நாடகத்தன்மை உணரப்பட்டாலும்   நாயகன் நாயகி தவிர்ந்து படம்ழுழுக்க பெரும்பாலும் புது முகங்களே அறிமுகப்படுத்தப்பட்டிருந்தபோதும் அனைவரது நடிப்பாற்றலும் மெச்சத்தக்கது.

42
76

ஜெராட்டின் நண்பனாக வரும்  சிறி லக்ஸ்மன் அனைத்துக் காட்சிகளையும் கலகலப்பாக்கியிருக்கிறார். பலாப்பழத்திற்கு உரத்திற்கு பதிலாக சீனி போட்டு வளர்பதாக கூறி பலாப்பழ வியாபரியாக சந்தையில் ஏமாற்றுவதில் தொடங்கி பாடசாலை கல்வியின் இறுதி நாளன்று காவலாளிக்கு விருந்து வைப்பதாக அழைத்து உணவுகளை உண்டபின் தாங்கள் உண்டவற்றிற்கும் காவலாளியை காசு கட்ட வைப்பது வரை இவர் செய்யும் குறும்புக் காட்சிகள் எல்லாம் சிரிப்புக்கு பஞ்சமில்லை. நம்ம ஊரிலும் நல்ல நகைச்சுவை நடிகர்கள் உண்டு என்பதை நிரூபித்திருக்கிறார்.

படத்தின் சில காட்சிகளில் எமக்கு அதிகம் அறிமுகமான இயக்குநர் மதிசுதா, சிறி துசிகரன் போன்றோரின் காட்சிகள் படத்திற்கு கூடுதல் பலம். படத்தில் நாயகனிடம் அடிவாங்கி படுத்திருந்த வில்லன் குழுவினர் வாங்கடா எழும்பி போவம் எங்கள் “சீன்” இதோட முடிஞ்சுது என பறப்படும்போது கைதட்டல்களில் அரங்கம் அதிர்கிறது.6626

இந்திய சினிமாவின் தழுவலின்றி – கீரோஜிசக் காட்சிகளின்றி எங்கள் மண்ணிலிருந்து வெளியாகும் ஒரு படம் எப்படி வெளிவரவேண்டும் என்பதில் அதிக சிரத்தை எடுத்திருக்கிறார்கள் இயக்குநர் வினோதனும், கதாசிரியரான தயாரிப்பாளர் உதயரூபனும். எதை எதை சேர்க்கவேண்டும் என்பதைக் காட்டிலும் எதை எதை ஈழ சினிமாவில் தவிர்க்கவேண்டும் என்பதில் அவர்கள் காட்டிய அக்கறை தெரிகின்றது. படத்தில் ஒரு காட்சியிலேனும் ஆபாசம் என்ற வார்த்தைக்கோ இரட்டை அரத்தங்களிற்கோ இடமில்லை.

மொத்தத்தில் ‘மனசுக்குள் ஒரு மழைச்சாரலை’ எங்கள் சினிமா என கொண்டாடலாம்.

வாகீசத்திற்காக – கலியுகன்

78

12

63

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நோர்வே திரைப்படவிழாவில் மூன்று விருதுகள் பெற்ற மனசுக்குள் ஒரு மழைச்சாரல்

குமாரசாமி உதயரூபனின் ராஜ் மூவீஸ் தயாரிப்பில் வினோதனின் இயக்கத்தில் ஈழத்துக் கலைஞர்களின் படைப்பாக வெளியாகிய மனசுக்குள் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com