தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வருபவர் ராதா ரவி. இவரது பெயரை கேட்டதுமே முதலில் நியாபகம் வருபது வில்லனாக இவர் நடித்து அசத்திய படங்கள் தான்.
முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்து இப்போது 40 வருடங்களாக சினிமாவில் கலக்கி வருகிறார்.

2002ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரைவில் தென்னிந்திய சினிமா நடிகர் சங்க தலைவராக இருந்தவர்.
அரசியலிலும் பெரிய ஈடுபாடு காட்டி வருபவர், அவ்வப்போது சில மேடைகளில் பேசிய விஷயங்கள் மூலம் சர்ச்சையிலும் சிக்கி வருகிறார்.

வெள்ளை சண்டை, பேன்ட்டில் அதிகம் வலம் வந்த ராதா ரவி அண்மையில் கோட்-சூட் அணிந்து ஒரு போட்டோ ஷுட் எடுத்துள்ளார். அதைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் அட நம்ம ராதா ரவியா என ஆச்சரியப்பட்டு வந்தார்கள்.
அவரின் இந்த புதிய லுக் மற்றும் போட்டோ ஷுட்டிற்கு காரணம் அவரது சொந்த பேத்தி தானாம். அவரது பேத்தி பவித்ரா சதீஷ் சினிமா துறையில் முன்னணி நடிகை மற்றும் நடிகர்களுக்கு உடை வடிவமைப்பாளராக பணியாற்றி வருகிறாராம்.