சற்று முன்
Home / செய்திகள் / தேர்தல் ஆணைக்குழு உட்பட பல சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்

தேர்தல் ஆணைக்குழு உட்பட பல சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்

தேர்தல் ஆணைக்குழு உட்பட பல சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளனர். 21ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின்படி நிறுவப்பட்ட அரசியலமைப்புச் சபையினால் நியமனங்கள் செய்யப்படவுள்ளன.

அரசியலமைப்பு பேரவை நாளை (25) காலை 09.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளதாக பாராளுமன்ற பிரதி பொது செயலாளர் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.

பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட 10 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப் பேரவைக்கு இதுவரை 09 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பிரதான எதிர்க்கட்சி அல்லாத ஏனைய எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பில், நாளைய தினம் கூடவுள்ள அரசியலமைப்பு சபையில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

பல ஆணைக்குழுக்களுக்கான தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான ஜனாதிபதியின் பரிந்துரைகளை அரசியலமைப்பு சபை அங்கீகரிக்க வேண்டும்.

இதன்படி, தேர்தல், எல்லை நிர்ணயம், பொதுச் சேவை, பொலிஸ், கணக்காய்வு சேவைகள், நிதி, கொள்வனவு, மனித உரிமைகள், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

About Mayoorathi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

யாழ்.மருதங்கேணி பிரதேசத்தில் கடலில் நீராடிய 15 வயது சிறுவனை காணவில்லை!

யாழ்ப்பாணம், மருதங்கேணி மாமுனை பிரதேசத்தில் கடலில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை நீராடச் சென்ற மூவரில் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com