சற்று முன்
Home / இந்தியா / இருதரப்பு பேச்சு வார்த்தைகளுக்காக இம் மாதம் இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை பயணம்!

இருதரப்பு பேச்சு வார்த்தைகளுக்காக இம் மாதம் இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை பயணம்!

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்காக இந்த மாதம் இலங்கைக்கு பயணிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இந்த பயணத்துக்கான இறுதி திகதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னர், ஜெய்சங்கர் இலங்கைக்கு பயணம் செய்வது இதுவே முதல்முறையாகும்.

நெருக்கடியான காலகட்டத்தில், இலங்கையும் இந்தியாவும் முக்கிய ஈடுபாடுகளை மேற்கொண்டதுடன் உணவு, மருந்துகள் மற்றும் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான கடன் வரி உட்பட நான்கு அம்சப் பொதியை உருவாக்கியுள்ளன.

About Mayoorathi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

அரசியல் கைதியான சிவ ஆரூரன் 15 வருடங்களின் பின் நிரபராதி என விடுவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்த போது, 2006 ஆம் ஆண்டு பித்தல ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com