சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை. வாணி போஜன். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு வெளிவந்த ஓ மை கடவுளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

சமீபத்தில் பரத் நடிப்பில் வெளிவந்த மிரள் படத்தில் கூட கதாநாயகியாக நடித்து நல்ல விமர்சனங்களை பெற்றார்.
அடுத்ததாக லவ், ஊர் குருவி, பகைவனுக்கு அருள்வாய் உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.
எப்படி இருக்கிறார் பாருங்க
நடிகை வாணி போஜன் முதன் முதலில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா, மாயா, தெய்வமகள் போன்ற சீரியல்களில் நடித்து தான் பிரபலமானார்.

ஆனால், அப்படி அவர் பிரபலமாவதற்கு முன்பே எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், நடிகை வாணி போஜனா இது! ஆள் அடையாளமே தெரியவில்லையே என்று கூறி வருகிறார்கள்.