சற்று முன்
Home / சினிமா / சூர்யா நடிப்பில் கைவிடப்பட்ட அருவா திரைப்படம் மீண்டும் தொடங்கப்பட இருப்பதாக வெளியான தகவல்!

சூர்யா நடிப்பில் கைவிடப்பட்ட அருவா திரைப்படம் மீண்டும் தொடங்கப்பட இருப்பதாக வெளியான தகவல்!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து பாலா இயக்கத்தில் தனது சொந்த தயாரிப்பில் வணங்கான் என்ற திரைப்படம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

படத்தின் படப்பிடிப்புகளும் தொடங்கி நடந்து வந்த நிலையில் திடீரென இந்த படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகுவதாக அறிவிப்பு வெளியானது. இயக்குனர் பாலாவும் இந்த அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்திருந்தார்.

இப்படியான நிலையில் தற்போது ஹரி சூர்யா கூட்டணியில் உருவாக இருந்து கைவிடப்பட்ட அருவா திரைப்படம் மீண்டும் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தில் நடிகர் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் அவருக்கு ஜோடியாக ராசி கண்ணா மற்றும் பூஜா ஹேக்டே நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


About Mayoorathi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நடராஜர் சிலையை திருடிய இராணுவச் சிப்பாய் கைது…!

வவுனியா புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் உள்ள ஆலயமொன்றில் இருந்து பித்தளை நடராஜர் சிலையை திருடியதாக சந்தேகத்தின் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com