தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக வாரிசு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் வம்சி இயக்க தமன் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் இருந்து முதல் சிங்கிள் ட்ராக் பாடலாக ரஞ்சிதமே பாடல் வெளியாகிய நிலையில் இரண்டாவது சிங்கிள் ட்ராக்காக தீ என்ற பாடல் வெளியானது.
இந்த பாடலை நடிகர் சிம்பு தான் பாடினார். பாடியது மட்டுமின்றி நடனமும் போட்டு இருந்தார். இந்த நிலையில் தற்போது இந்த பாடலை பாட நடிகர் சிம்பு ஒரு ருபாய் கூட சம்பளம் வாங்கவில்லை என ஆச்சரியமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.