சற்று முன்
Home / செய்திகள் / IMF ஆதரவளித்தாலும் இல்லாவிட்டாலும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த வேண்டும்!!!

IMF ஆதரவளித்தாலும் இல்லாவிட்டாலும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த வேண்டும்!!!

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவது மருத்துவரைப் பார்க்கச் செல்வது போன்றதாகும் என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

அங்கு தரும் தீர்வுகள் சில சமயங்களில் விரும்பத்தகாததாக இருக்கும். சில சந்தர்ப்பங்களில் நிதி தீர்வுகள் வலியை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நிதி நல்லிணக்கத்தைப் பேணுவது இன்றியமையாதது. அதற்காக அரசியலமைப்பு ஏற்பாடுகள் போன்ற சட்ட காரணிகளால் நிதி முகாமைத்துவம் ஆதரிக்கப்பட வேண்டும்.

இலங்கை மத்திய வங்கியை அபிவிருத்தி வங்கியாகக் கருதாது அதன் சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் அக்கறை செலுத்த வேண்டும். சர்வதேச நாணய நிதியம் ஆதரவளித்தாலும் இல்லாவிட்டாலும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன், இந்த நிதி திட்டத்திற்கு அதிகப் பணம் செலவழித்ததன் காரணமாக வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை மேலும் அதிகரித்தது. இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் வளர்ச்சிக்கு ஒரு காரணமாக அமைந்தது என முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.

About Mayoorathi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

யாழ்.மருதங்கேணி பிரதேசத்தில் கடலில் நீராடிய 15 வயது சிறுவனை காணவில்லை!

யாழ்ப்பாணம், மருதங்கேணி மாமுனை பிரதேசத்தில் கடலில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை நீராடச் சென்ற மூவரில் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com