சர்வகட்சி அரசாங்கம் ஒன்று அமைப்பது தொடர்பிலான முதலாவது கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் இன்று மாலை ஐந்து மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றினை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளுக்கும் குறித்த கலந்துரையாடலில் பங்கேற்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
எவ்வாறாயினும் கடந்த சில தினங்களு;ககு முன்னர் சர்வகட்சி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தினை பிரதிநிதித்துவ படுத்தும் கட்சிகளுடன் பிரத்தியேக பேச்சுக்களை முன்னெடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.