லங்கா பிரீமியர் லீக் (LPL) இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் போட்டி ஓகஸ்ட் 1 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலைமை காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது.
இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அந்த நிறுவனத்தின் தலைவர் ஐ.பி.ஜி. அனில் மொஹான் கூறுகையில், “முதலில் திட்டமிட்டபடி போட்டியை நடத்துவது கடினம் என்று கண்டறிந்தோம். இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் நாட்டின் நிலைமை சீரான நிலைக்கு வரும் என்று நாங்கள் நினைக்கிறோம். அப்போது வெளிநாட்டு வீரர்கள் தங்கள் குடும்பத்தினரின் உதவியுடன் இலங்கைக்கு வரலாம். எனவே, போட்டியை டிசம்பர் வரை ஒத்திவைப்பதே இப்போதைக்கு சிறந்த தீர்வு” என்றார்.