
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலினின் கைதைக் கண்டித்து யாழ்ப்பாணத்திலுள்ள பாடசாலைகளின் முன்னால் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று காலை 10:30 மணியளவில் ஒன்று கூடிய அதிபர் மற்றும் ஆசிரியர்களே கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது ஜோசப் ஸ்டாலினின் கைதைக் கண்டிக்கும் வாசகங்களை கொண்ட பதாகைகளையும் போராட்டத்தில் ஈடுபட்ட அதிபர் மற்றும் ஆசிரியர்கள் தாங்கியிருந்தனர். இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் நடத்தியதற்காக நேற்றைய தினம்(3) பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இதேவேளை, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலினின் கைதைக் கண்டித்து யாழ் புனித ஜேம்ஸ் மகளிர் பாடசாலையின் முன்னால் ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலை 10:30 மணியளவில் ஒன்று கூடிய ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது ஜோசப் ஸ்டாலினின் கைதைக் கண்டிக்கும் வாசகங்களை கொண்ட பதாகைகளையும் போராட்டத்தில் ஈடுபட்ட அதிபர் மற்றும் ஆசிரியர்கள்தாங்கியிருந்தனர்.