சற்று முன்
Home / செய்திகள் / காங்கிரசின் தேசிய பட்டியல் எம்.பி கஜேந்திரன் அம்பாறைக்கு விஜயம்

காங்கிரசின் தேசிய பட்டியல் எம்.பி கஜேந்திரன் அம்பாறைக்கு விஜயம்

அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினரான செல்வராஜா கஜேந்திரன் அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

கடந்த 9 ஆவது பாராளுமன்ற தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சார்பில் இரண்டு ஆசனங்கள் பெறப்பட்ட நிலையில் தேசிய பட்டியல் மூலம் செல்வராஜா கஜேந்திரன் கட்சியினால் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று(11) அம்பாறை மாவட்டத்தின் மக்கள் பிரச்சினைகளை ஆராயும் முகமாக அம்பாறை சென்றிருந்த அவர் கல்முனை உப பிரதேச செயலகம் நாவிதன்வெளி பிரதேச செயலகம் திருக்கோவில் மற்றும் பொத்துவில் பகுதிகளுக்கும் விஜயம் செய்திருந்தார்.

இவ்வாறு விஜயம் செய்த பின்னர் கல்முனை உப பிரதேச செயலகம் தரமுயர்த்த தமது கட்சி கடந்த காலங்களில் செயற்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் காலங்களில் அதனை செயலுருவாக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார்.

இதே வேளை பாராளுமன்ற உறுப்பினர் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் மற்றும் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தின் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோரை சந்தித்திருந்ததுடன் இவர் பாராளுமன்ற உறுப்பினருக்குரிய பாதுகாப்பு உத்தியோகத்தர் எவரும் இன்றி தமது கட்சியின் தனிப்பட்ட பாதுகாப்பு பிரிவினருடன் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இலங்கையில் கொரோனா 3 ஆவது அலையில் 64 நாட்களில் 1816 பேர் மரணம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் மூன்றாவது அலையால் ஏப்ரல் 15ஆம் திகதி முதல் இதுவரை 1,816 ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com