Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

ஆசிரியர்கள் பிற்பகல் 3.30 மணிவரைஇருக்கவேண்டியது அவசியமில்லை

எதிர்வரும் ஜூலை 6ஆம் திகதி திங்கட்கிழமை முதல் 5,11 மற்றும் 13 ஆம் தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அனைத்து ஆசிரியர்களும் பிற்பகல் 3.30 மணி வரை பாடசாலைகளில் இருக்க வேண்டிய அவசியமில்லை என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது..

பாட நேர அட்டவணைப்படி நிறைவு செய்வது போதுமானது என்று கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாடசாலை அதிபர்களால் ஆசிரியர்களுக்கு பாடநெறிக்கு புறம்பான பணிகள் ஒதுக்கப்படாவிட்டால், ஆசிரியர்கள் பிற்பகல் 3.30 மணி வரை பாடசாலை வளாகத்தில் இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் ஜூலை 6ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்குமாறு கல்வி அமைச்சாலை மாகாண மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளில் மாணவர்கள் கைகளைக் கழுவுதலுக்கான வசதிகளை வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும், மேலும் ஒரு உள் மருத்துவ பிரிவும் இருக்க வேண்டும் என்று கல்வி அமைச்சுக் குறிப்பிட்டுள்ளது.

மேலும், காய்ச்சல் / இருமல் / சளி அல்லது பிற அறிகுறிகளை வெளிப்படுத்தினால் தங்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதைத் தவிர்க்குமாறு அனைத்து பெற்றோர்களுக்கும் கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com