சற்று முன்
Home / செய்திகள் / விடுதலைப் புலிகள் இயக்கதிலிந்து கருனாவை பிரித்தது நாங்கள்- ரணில்

விடுதலைப் புலிகள் இயக்கதிலிந்து கருனாவை பிரித்தது நாங்கள்- ரணில்


2001ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சமாதான ஒப்பந்தத்தின் போது விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து கருணாவை பிரித்தெடுத்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி முக்கிய உறுப்பினர்கள் பலர் நேற்று ரணில் விக்ரமசிங்கவை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்திருந்தனர். இதன்போதே அவர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கூறுகையில்,

‘ஒரே இரவில் 3000 படையினரை கொன்று குவித்ததாக கருணா அம்மான் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தை பாதுகாக்கவே இவ்வாறானதொரு கருத்தினை அவர் தெரிவித்துள்ளார்.

புலிகள் இயக்கத்திலிருந்து கருணா அம்மானை பிரித்தெடுத்த பின்னர் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக கருணாவை உபாய முறையாக பயன்படுத்தினோம். எனினும் அதற்காக அவருக்கு ஐக்கிய தேசிய கட்சியில் உப தவிசாளர் பதவியினையோ, அமைச்சு பதவியினையோ வழங்கவில்லை.’ – என்றார்

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com