கொரோனா நோய் தொற்று இடர் நிலமைகள் காரணமாக வியாபாரிகளினுடைய வருமாணத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமைகளினை கருத்தில் கொண்டு நல்லூர் பிரதேச சபையிக்கு சொந்தமான கடைகளை வாடகைக்கு பெற்று நடாத்துவோர் ஒரு மாத வாடகையினை பிரதேச சபைக்கு செலுத்த தேவையில்லை என தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
நேற்றைய நல்லூர் பிரதேச சபை அமர்வில் உறுப்பினர் மதுசுதன் வியாபாரிகளின் பிரச்சினை தொடர்பில் சபையின் கவனத்திற்கு தெரியப்படுத்தியதை அடுத்து பிரதேச சபைக்கு சொந்தமான கடைகளினை வாடகைக்கு பெற்றுக் கொண்ட வியாபாரிகள் இரு மாத வாடகை கட்டவேண்டி இருப்பினும் தற்போதய நிலைமையினை கருத்தில் கொண்டே ஒரு மாத வாடைகைப் பணத்தினை செலுத்த வேண்டியதில்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.