முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவைச் சேர்ந்த தேவிபுரம் பகுதியில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் தவறுதலாக கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (11) மாலை இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் வள்ளிபுனம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் தேவிபுரம் பகுதியை சேந்த 11 வயதுடைய வடிவேல் வினுஜன் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளான்.
இன்று வீட்டில் உணவை அருந்திவிட்டு விளையாடிக்கொண்ட சிறுவனை காணவில்லை என உறவினர்கள் தேடியபோது கிணற்றுக்குள் இருப்பது தெரிய வந்தது.
உடனடியாக சிறுவனை உறவினர்களின் உதவியோடு மீட்டு புதுக்குடியிப்பு வைத்தியசாலைக்கு எடுத்து சென்றபோது அச்சிறுவன் இறந்தது தெரியவந்துள்ளது.