Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

காய்ச்சல் என வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்ட பெண் மரணம் – கொரோனா என சந்தேகம்

வவுனியா வைத்தியசாலைக்கு காய்ச்சல் காரணமாக நேற்று (01.04.2020) அனுமதிக்கப்பட்ட வயோதிபப் பெண் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார்.

இதனை அடுத்து அவரின் இரத்தமாதிரி அனுராதபுரம் கொரோனா தடுப்பு மையத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்திருப்பதாக வவுனியா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா சேர்ந்த அருட்செல்வன் கலாராணி (வயது 56 ) வயோதிபப் பெண்மணி ஒருவர் இரண்டு வாரங்கள் தொடர்ந்து காய்ச்சலால் அவதிப்பட்டதாகத் தெரிவித்து உறவினர்களால் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அனுமதித்தவர்களிடம் மருத்துவர்கள் விசாரித்ததன் அடிப்படையில், இரண்டு வாரங்கள் தொடர்ந்து காய்ச்சலால் அவதிப்பட்டதாகவும் தெரிவித்திருக்கின்றனர். அவரின் நோய் அறிகுறிகளை விசாரித்த மருத்துவர்கள் கொரொனா தொற்றாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கொரோனா தடுப்பு விடுதிக்கு அவரை மாற்றி சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தை அடுத்து குறித்த பெண்ணின் இரத்த மாதிரிகள் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு பரிசோதனைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து மருத்துவ அறிக்கை கிடைக்கப்பெற்றதுமே மரணம் நிகழ்ந்தமைக்கான காரணம் தெரியவரும் என்றும் வவுனியா பொது வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனிடையே குறித்த பெண் இரண்டு வாரங்களுக்கு முன் யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com