Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கொரோனா தொற்றுக்குள்ளான மானிப்பாய் மத போதகர் குறித்து மேலதிக தகவல்கள் வெளியானது..!

Abstract symbol of Coronavirus, 2019-nCov novel coronavirus concept

யாழ்ப்பாணத்தில் இன்று கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட மானிப்பாய் பகுதியை சேர்ந்த மதபோதகர் சுவிஸ் நாட்டிலிருந்துவந்த மதபோதகருடன் மிக நெருக்கமாக பழகியவர் என தெரியவந்துள்ளது.

கடந்த மாதம் 15ம் திகதி அரியாலை பிலதெல்பியா தேவாலயத்திற்கு சுவிஸ் நாட்டிலிருந்து வருகைதந்த மதபோதகருடன் பழகிய யாழ்.தாவடியை சேர்ந்த ஒருவர் கொரொனா தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டார்.

இதனடிப்படையில் குறித்த மதபோதகளுடன் பழகிய மற்றும் அவர் கலந்து கொண்ட நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் என 346 பேர் வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

குறித்த 346 பேரில் 20 பேர்சுவிஸ் போதகருடன் நெருக்கமாக பழகியதன் அடிப்படையில் காங்கேசன்துறையில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்களின் தனிமைப்படுத்தல் காலம் இம்மாதம் 6ம் திகதியுடன் நிறைவடையும் நிலையில், அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடாத்தப்பட்டபோதே கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் போதகர் அடையாளம் காணப்பட்டிருக்கின்றார்.

இதனை உறுதிப்படுத்தியிருக்கும் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி மற்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் ஆகியோர் மக்கள் பீதியடையவேண்டாம். சுகாதார நடைமுறைகளை ஒழுங்காக பின் பற்றுமாறும் முடிந்தவரை வீடுகளுக்குள் இருக்குமாறும் கேட்டிருக்கின்றனர்.

இதனிடையே குறித்த மதபோதகரின் மனைவியே சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி உத்தியோகத்தராக உள்ளதோடு அவர் அவர் கடந்த பங்குனி மாதம் 18-20 ஆம் திகதிக்குட்டபட்ட காலப்பகுதியில் சுமார் 350 சமுர்த்திப் பயனாளிகளுக்கு சமுர்த்தி முத்திரை வழங்கியிருந்தார் என்பதும் குறிப்பிட்த்தக்கது. இதேவேளை குறித்த சமுர்த்திப் பயனாளிகளை தனிமைப்படுத்துவது தொடர்பில் யாழ் மாவட்டச் செயலர் கடந்த வாரம் கருத்து வெளியிட்டிருந்ததும்தும் குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com