Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

25 ஆயிரம் வீர மறவர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு – இன்று மாலை 6 மணி முதல் நல்லூரில் மக்கள் அஞ்சலிக்கு

தம்மை உருக்கி தமிழுக்கு ஒளிதந்தும், எமது வாழ்விற்காக தமது இன்னுயிர் தந்தும் மண்ணுக்குள்ளே கண்ணை மூடி மீளாத் துயில் கொள்ளுகின்றவர்களில் இருபத்திஐயாயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் திருநாமம் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் (கல்லறைகள்) 26.11.2019 (நாளை) மாலை 6 மணி முதல் தியாக தீபம் திலிபன் அவர்களின் நினைவாலயத்திற்கு முன்பாக மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் என தியாக திலீபன் நினைவுவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் ஒருங்கிணைப்பில் சுமார் 25 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களின் திருநாமங்கள் கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டு மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளன.

இது தொடர்பில் தெரிவித்துள்ள ஏற்பாட்டுக் குழுவினர்,
எங்களுக்காக இன்னுயிர் தந்தவர்களை நினைவு கூர்ந்து ஒரு கணம் தலைசாய்து பூச்சொரிந்து வணக்குவோம் வாருங்கள் என அழைப்பு விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com