Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

விசாரணைக்கு அழைத்துச் சென்ற குடும்பஸ்தர் பொலிஸ் கட்டுப்பாட்டில் மரணம் – துன்னாலையில் சம்பவம்

யாழ்.நெல்லியடி பொலிஸாாினால் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட நபா் பொலிஸாாின் கட்டுப்பாட்டில் இருந்தபோது உயிாிழந்தமையால் பொலிஸ் நிலையத்தில் பதற்றமான சூழல் உருவானதுடன், பொலிஸாா் அடித்து கொலை செய்ததாக உறவினா்கள் பொலிஸாா் மீது குற்றஞ்சாட்டியுள்ளனர்.

எனினும் குறித்த நபரை தாம் கைது செய்ய முன்னர் அவா் அரலி விதை சாப்பிட்டிருந்ததாக பொலிஸாா் கூறியுள்ளனா்.

இந்தச் சம்பவம் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றது. சம்பவத்தில் துன்னாலையைச் சேர்ந்த ஜே.ரூபன் (வயது – 40) என்ற குடும்பத்தலைவரே இவ்வாறு உயிரிழந்தார்.

குடும்ப வன்முறை தொடர்பில் குடும்பத்தலைவருக்கு எதிராக நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பில் விசாரணைக்காக அவரை அழைத்த போதும் அவர் பொலிஸ் நிலையத்துக்கு வருகை தராமல் தலைமறைவாகியிருந்தார்.

நேற்றைய தினம் அவர் வீட்டுக்கு அருகிலுள்ள காணி ஒன்றில் நிற்பதாக பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கப்பட்டது. அதனடிப்படையில் நேற்றிரவு 7.30 மணியளவில் அங்கு சென்ற பொலிஸார் அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையிலேயே பொலிஸ் நிலையத்தில் குடும்பத்தலைவரிடம் வாக்குமூலம் பெறப்பட்ட வேளை, இரவு 10 மணியளவில் அவர் வாந்தி எடுத்தார் எனவும் அதன்போது அவர் தான் அலரி விதை உட்கொண்டதாக தெரிவித்ததாகவும் அதனையடுத்து அவரை உடனடியாக மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதாகவும் அங்கு அவர் உயிரிழந்தார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் உடல் மந்திகை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. உடற்கூற்று பரிசோதனை இடம்பெறாததால் அவரது உயிரிழப்புக்கான காரணத்தை சுயாதீனமாக அறியமுடியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com