Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

பல்கலை ஊழியர் தொழிற்சங்கப் போராட்டம் இடைநிறுத்தம்

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொடர் தொழிற்சங்க போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பினால் அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலிலும் 10.09.2019இலிருந்து தொடர் தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையிலேயேஉயர் கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோரின் கூட்டுக் கையொப்பத்துடன் பெற்றுக் கொள்ளப்பட்ட எழுத்து மூலமான கடிதத்தினைத் தொடர்ந்து குறித்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்க தலைவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு வருமாறு,

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பினால் அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலிலும் 10.09.2019இலிருந்து முன்னெடுக்கப்பட்டு வந்த தொடர் தொழிற்சங்க போராட்டமானது 11.10.2019 இன்று வெள்ளிக்கிழமை மாலை உயர் கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோரின் கூட்டுக் கையொப்பத்துடன் பெற்றுக் கொள்ளப்பட்ட எழுத்து மூலமான கடிதத்தினைத் தொடர்ந்து எதிர்வரும் திங்கட்கிழமை (14.10.2019) அவ்வவ் பல்கலைக்கழகங்களில் நடைபெறும் விளக்கப் பொதுக்கூட்டத்தின் பின்னர் தற்காலிகமாக இடைநிறுத்தப்படும்.

இதற்கமைய யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும்,
யாழ் பல்கலைக்கழக இராமநாதன் மண்டப முன்றலில் 14.10.2019 திங்கட்கிழமை காலை 08.00நடைபெறும் விளக்கப் பொதுக்கூட்டத்தின் பின்னர் அங்கு எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு அமைவாக குறித்த நேரங்களிற்கு கல்விசாரா ஊழியர்கள் பணிக்குத்திரும்புவர்.

த.சிவரூபன்
தலைவர்
பல்கலைக்கழக ஊழியர் சங்கம்
யாழ் பல்கலைக்கழகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com