சற்று முன்
Home / உள்ளூர் செய்திகள் / காணாமல் போனவர்களின் உறவுகளை அச்சுறுத்தும் கோட்டாவின் பங்காளி கட்சி …

காணாமல் போனவர்களின் உறவுகளை அச்சுறுத்தும் கோட்டாவின் பங்காளி கட்சி …

ஆக்கப்பட்டடோருக்கான சங்கத்தலைவிக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் டக்ளஸ் தேவானந்தா முறைப்பாடு செய்ததாகக் கூறி உறவுகளைத் தேடிவரும் எமக்ச்சுகு அச்றுத்தல் விடுத்துள்ளார். அவர் அதிகாரத்தில் இருந்தபோது அவர் என்னென்ன செய்தார் என்று அவரது மனச்சாட்சிக்குத் தெரியும் என வட கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சங்கத் தலைவி கலாரஞ்சினி தெரிவித்தார்.

யாழ்.ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அதிகாரத்தில் இருந்தபோது பல இளைஞர்களை கடத்தி படுகொலை செய்தார் என முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டேருக்கான சங்கத்தலைவி அண்மையில் ஊடகவிலாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார். அது ஊடகங்களில் வெளியானதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தாம் குறித்த பெண்மணி மீது கொழும்பு பொலிஸ் தலைமையத்தில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளதாகவும் அதில் தாம் கடத்தியதற்கான ஆதாரங்கள் இருந்தால் சமர்ப்பிக்குமாறும் கோரியுள்ளதாக ஊடகங்கள் வாயிலாகத் தெரிவித்திருந்தார்.

இவரது செயற்பாடு கடந்த காலங்களில் எவ்வாறு இருந்தது என்று அவருக்கு நன்றாகவே தெரியும். அதேபோன்று மக்களும் நன்றாக அறிவார்கள். காணாமல் போன உறவுகளை தோடிவரும் எம்மைப்போன்ற குடும்பத்தினர் மீது அதிகாரங்களைத் திணித்து எமதுபோராட்டங்களை மழுங்கடிக்க முயற்சிக்கின்றார். பொலிஸில் முறையிட்டுள்ளேன் என்பதன் ஊடாக டக்ளஸ் தேவானந்தா எமக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார். தமிழ் இனத்தைச் சேர்ந்தவராக இருந்துகொண்டு எமது கண்ணீரில் வேடிக்கை பார்க்கிறார்.

ஐக்கியதேசியக் கட்சியைச் சேர்ந்த பெண் அமைச்சரான விஜயகலா மகேஸ்வரன் தனது கணவரை கொன்றவர் இந்தப் நாடாளுமன்றத்திலேயே இருக்கின்றார். அவர் பல கொலைகளுடன் சம்பந்தப்பட்டும் உள்ளார் என பகிரங்கமாக அவருடன் வாதாட்டம் செய்துள்ளார்.அதற்கு முழுமையாக பதிலளிக்காத நாடாளுமன்ற உறுப்பினர் எம்மிடம் ஆதாரங்களை கேட்கின்றார். அவர் பொலிஸார் ஊடாக விடுத்துள்ள சவாலை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கின்றோம் ஏட்டிக்குப் போட்டியாக நாம் கருத்துக்களை வெளியிடுவதற்கு அரசியல்வாதிகள் அல்லர். நாம் உறவுகளை தொலைத்த நிலையில் நீண்டகாலமாக தேடிப் போராடி வருகின்றோம் இன்றுவரை எமக்கான நீதி கிடைக்கவில்லை.

இந்நிலையில் வடக்கு கிழக்கு மாகாணங்களின் மூன்று வருடங்களாக வீதிகளில் போராடி வருகின்றோம். எமது போராட்டத்திற்கு எங்கள் தமிழ்த் தலைமைகளும் நீதியை இன்றுவரை பெற்றுத்தரவில்லை. நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோதும் எமது பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றார்.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

அரச ஊழியர்களைக் கடமைக்கு அழைக்கும் புதிய சுற்றறிக்கை

அரச நிறுவனங்களில் குறைந்தபட்ச ஊழியர்களுடன் அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் மேற்கொள்ள வேண்டும் என்று இன்று வெளியிடப்பட்டுள்ள ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com