Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

19 ஆவது திருத்தம் நாட்டுக்குச் சாபக்கேடு – நீக்கப்படவேண்டும் என்கிறார் மைத்திரி

நாட்டின் ஸ்திரத்தன்மை இன்மைக்கு 19ம் திருத்தச் சட்டமே காரணம்.அடுத்ததாக எவர் ஆட்சிக்கு வந்தாலும், 19ம் திருத்தச் சட்டத்தை நீக்க வேண்டும்.
அவ்வாறு நீக்கினால் மட்டுமே 2020ம் ஆண்டு இலங்கைக்கு நன்மையான ஆண்டாக இருக்கும் அரசியலமைப்பின் 19 வது திருத்தம் ஒரு சாபக்கேடு. அப்போது அரச சார்பற்ற அமைப்புக்கள் வழங்கிய அழுத்தத்தினால் செய்யப்பட்ட அந்த திருத்தம் குறித்து ஆராய்ந்து அதை செய்ய முன்னின்றவர்கள் அரசியலமைப்பு நிபுணர்களா என்று பார்க்க வேண்டும்.ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் இதனை ஒழித்தால் கூட நல்லது தான்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதா? இல்லையா? SLFP மேற்கொள்ளும் தீர்மானத்தின் அடிப்படையில் செயற்படுவேன். சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் என வந்த செய்திகள் தவறானவை. வெளிநாட்டு விஜயம் நான் செய்யும்போது குறிப்பிட்ட சிறு குழுவையே அழைத்து செல்கிறேன். ஆனால் ஊடகங்கள் மிகை செய்திகளை வெளியிடுகின்றன.

நான் கடந்த 4 ஆண்டுகளில் 10க்கு மேற்பட்ட உறுப்பினர்களை என்னுடன் வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்றதில்லை. தஜிகிஸ்தானுக்கு 50 பேரை அழைத்து சென்றதாக கூறப்படுவதில் உண்மையில்லை.அமெரிக்காவுடனான சோபா ஒப்பந்தம் குறித்து நான் அதிருப்தியை வெளியிட்டேன்.ரஷ்யாவுடன் பாதுகாப்பு உறவுகளை நிறுத்துமாறு அமெரிக்கா இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

நான்கு பேரின் மரண தண்டனை நிறைவேற்ற அமுலாக்கத்திற்கு நான் கையெழுத்திட்டுள்ளேன்

அமெரிக்கா உடனான சோபா மற்றும் எக்சா உடன்படிக்கைகளுக்கும் நான் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளேன். இவை நாட்டுக்கு ஆபத்தானவை…”

சற்று முன்னர் ஊடக பிரதானிகளுடன் நடந்த சந்திப்பில் வைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com