சுதந்திரக் கட்சிக்கு மாவட்ட அமைப்பாளர்கள் நியமனம்!

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் இன்று (11) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.

அவர்களது பெயர் விபரங்கள் பின்வருமாறு

ஜீவன் குமாரதுங்க         –       கஸ்பேவ தொகுதி அமைப்பாளர்

நாமல் சுரங்க                  –       கம்பஹா, ஜாஎல தேர்தல் தொகுதி அமைப்பாளர்

லலித் டென்சில்            –       நீர்கொழும்பு தொகுதி இணை அமைப்பாளர்

ரவீந்ர ஸ்ரீ சுரங்க                 –       ஹொரண தொகுதி அமைப்பாளர்

சுகத் முதுகமகே                 –       பேருவளை தொகுதி அமைப்பாளர்

சாலிய குணசிங்க    –       களுத்துறை மாவட்ட அமைப்பாளர்

எச்.பிரியந்த புஸ்பகுமார   –       கண்டி, பாததும்பரை தொகுதி இணை அமைப்பாளர்

அனுருத்த பாலித்த பண்டார   –       உடுதும்பரை தொகுதி இணை அமைப்பாளர்

கனிஷ்ட அவினாஸ் ரத்னசேகர –    இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர்

கனகசூரியன் உதயகுமார்  –       திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் தொகுதிக்கு பொறுப்பான அமைப்பாளர்

எஸ்.எம். சுக்கியன்  –       மூதூர் தொகுதி இணை அமைப்பாளர்

ஏ.ஆர்.இத்ரீஸ்  –       மூதூர் பிரதேசத்திற்கு பொறுப்பான அமைப்பாளர்

எம்.எச்.எம்.ராசிக்       –       கிண்ணியா பிரதேசத்திற்குப் பொறுப்பான அமைப்பாளர்

என்.சுனில் ராசிக் –       குச்சவெளி பிரதேச அமைப்பாளர்

அழகு தர்மராஜன்    –       திருகோணமலை கப்பற்துறை பிரதேசத்திற்கும் பொறுப்பான அமைப்பாளர்

காளிராஜா கிருஷ்ணராஜா     –       திருகோணமலை நகர சபை பிரதேசத்தின் தமிழ் பிரிவிற்கான அமைப்பாளர்

ஆர்.ஹலிபுல்லா    –       தம்பலகாமம் பிரதேச தொகுதி அமைப்பாளர்

மேலும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை மறுசீரமைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் தொகுதி அமைப்பாளர்களையும் மாவட்ட அமைப்பாளர்களையும் அவர்களது பதவிகளில் இற்றைப்படுத்தி நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வும் இன்று ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்றது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன உள்ளிட்ட சிரேஷ்ட  உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com