Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

“வா தமிழா” காணெளிப் பாடல் வெளியீடு

படைப்பாளிகள் உலகத்தின் தயாரிப்பில் மிதுனாவின் இயக்கத்திலும் நடிப்பிலும் உருவான வா தமிழா காணொளி பாடல் வெகுவிரைவில் வெளிவரவுள்ளது.

ஈழத்தில் குறிப்பிடத்தக்க பெண் இயக்குனர்களில் ஒருவரான மிதுனா இப்பாடலை இயக்கி பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் இணைந்து சஞ்சய், கபில் சாம், ஜினு, நியூட்டன், புவிகரன், சசிக்குமார், தமிழ்மதி, வாணி, செந்தூர்செல்வன் மற்றும் மூங்கிலாறு மக்கள் நடித்துள்ளனர்.

பாடல் வரிகளை மாணிக்கம் ஜெகன் எழுதியுள்ளார். சிவா பத்மஜன் பாடலுக்கு இசையமைத்துள்ளார். கோகுலன் மற்றும் மாணிக்கம் ஜெகன் ஆகியோர் பாடியுள்ளனர்.

பாடல் ஒளிப்பதிவினை ஸ்டாண்டட் வீடியோ செய்துள்ளது ஒளித்தொகுப்பினை சசிகரன் யோ செய்துள்ளார். வடிவமைப்பினை சஞ்சய் செய்துள்ளார். உதவி இயக்குனர்களாக ஜினு யூட் ஜெனிஸ்ரன் மற்றும் சஜிர் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com