
புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகள் காலம் கடந்து விட்டது எனக் கூறியிருக்கும் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் அமைச்சரான மனோ கசேணன் புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுவடைந்துவருவதாக குறிப்பிட்டுள்ளார்.
தனது சமூக வலைத்தளத்தில் இது தொடர்பான கருத்துக்களை பகிர்ந்துள்ள அவர்,
புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகள் காலம் கடந்து விட்டது. புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுவடைந்துவருகிறது.
இதை ஊகித்தே பல வருடங்களுக்கு முன்னமேயே, “இது வரும்; ஆனால் வராது”. நேரத்தை வீணடிக்காமல் வேறு வழிமுறைமையை நாடவேண்டும் என்றேன். வேறு வழிமுறைமை என்றால், வழிநடத்தல் குழு என்ற பேச்சு பெட்டியை விடுத்து, அனைத்து தமிழ் எம்பீக்களின் ஒன்றியம் அமைப்போம் என்றேன்.
ஆரம்பத்தில், ஜனாதிபதி முறை ஒழிப்பு, தேர்தல் முறை மாற்றம், அரசியல் தீர்வு என்றார்கள். முதலிரண்டை மட்டும் செய்ய முயன்றார்கள். புதிய தேர்தல் முறையை உள்ளூராட்சியில் ஆரம்பித்து மாகாணசபை, பாராளுமன்றம் வரை கொண்டு வந்து எம்மை முழுசா முடிக்க முயன்றார்கள்.
புதிய தேர்தல் முறை மாற்றத்தை தடுத்து நிறுத்திய பெருமை தமிழ் முற்போக்குக் கூட்டணி, முஸ்லீம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய மூன்று சிறுபான்மை கட்சிகளுக்கு மட்டுமே உண்டு – எனக் குறிப்பிட்டுள்ளார்.
நீங்களும்தானே ஐயா ரணிலும், அவரது கட்சியும் வெட்டிப் புடுங்கிவிடும் என முன்னர் சொன்னீாகள். ஒருபொழுதும் இனப்பிரச்சினை சிங்களக் கட்சிகளால் தீர்க்கப்படமாட்டாது என முகநூலில் எனது கருத்தை எழுதியபோது, நீங்கள் என்னை முகநூல் நண்பரில்லாது செய்“துவிடுவேன் என்றும் மிரட்டினீர்கள். நீங்கள் நீக்கினால் என்ன நீக்கவிட்டால் என்ன இதுதான் உண்மை, நீங்களும் ஏமாற்ற ஆரம்பிக்கிறீர்கள் என்றேன். என்னை நண்பர் பட்டியலில் இருந்து நீங்க்கியிருந்தீாகள். ஐக்கிய தேசியக் கட்சி அரசுடன் இணைந்தீர்கள் அமைச்சர் பதவியும் பெற்றீர்கள். இப்போது என்ன ஐயா பேசுகிறீர்கள். பல வருடங்களின் பின்னர்தான் உண்மை விளங்கியதா? போங்கையா. நீங்களும் உங்களது அரசியலும்!!