Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

செய்தி இணையமாய் மூன்றாம் ஆண்டு நிறைவில் உங்களைச் சந்திக்கிறோம்

அனைத்து வாசகர்களுக்கும் தமிழர் திருநாளாம் தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள். “தமிழர் திருநாளில்” செய்தி இணையமாக 03 ஆவது ஆண்டினை நிறைவுசெய்து நான்காவது ஆண்டில் தடம்பதிக்கும் வாகீசத்தின் ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.

இன்றைய தினம் வாகீசம் இணையம் பதிவு செய்யபட்டு உத்தியோகபூர்வமாக செய்தித் தளமாக பரணமித்த 03 ஆம் ஆண்டு நிறைவு நாளாகும்.

ஏழு வருடங்களுக்கு முன்னர் தனியொரு கிராமத்தின் செய்திகளை புலம்பெயர்ந்து வாழும் உறவுகள் அறியப்பெறுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட கிராமிய தளமாக “வாகீசம்” பரிணமித்தது. சில ஊடக நண்பர்களின் முயற்சியோடு வாகீசத்தை செய்தித் தளமாக பரவலடையச் செய்யவேண்டும் என்ற முயற்சி எடுக்கப்பட்டு அந்த முயற்சியை அடுத்து கிராமிய தளமாகவும், இலக்கிய தளமாகவும் செயற்பட்டுவந்த வாகீசம் இணையம் கடந்த 2016 ஆம் ஆண்டு தை மாதம் இலங்கை அமைச்சினால் பதிவுசெய்யப்பட்டு செய்தி இணையமாக தனது உத்தியோகபூர்வ பயணத்தை 2016 தைத் திங்கள் முதலாம் நாள் தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாளில் யாழ்ப்பாணத்தில் இருந்து ஆரம்பித்தது.

நாங்கள் நடுநிலையாக இல்லை

செய்தி இணையமாக பரிணாமம் பெற்று இன்று மூன்றாம் ஆண்டின் பூர்த்தியையும் நான்காம் ஆண்டின் ஆரம்ப நாளினையும் கொண்டாடும் வாகீசம் இணையம் அரசியல் செய்திகளையம் மக்களின் பிரச்சனைகளையும் முதன்மைப்படுத்தி செய்திகளை வெளியிட்டு வருகின்றது. எனினும் அரசியல் செய்திகளில் வாகீசம் நடுநிலைமை பேணுவதில்லை என்ற விமர்சனம் ஒரு சில அசியல் ஆதரவு வாசகர்களால் கடுமையாக அவ்வப்போது வைக்கப்படுவதுண்டு.

அதற்கு ஆம் நாங்கள் நடுநிலையாக இல்லை என்று துணிந்து பதிலளிக்க தயாராகவே இருக்கிறோம். தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் சார்ந்தோ தமிழ் மக்களது அபிலாசைகள் சார்ந்தோ செயற்படாது தமது அற்ப சொற்ப பதவி ஆசைகளுக்கும் சலுகைகளுக்கும் விலைபோகும் அரசியல் தலைமைகள் யாராக இருந்தாலும் அவர்களை மிக கடுமையாக விமர்சித்தே செய்திகளை வெளியிடுவோம். இதனை தமிழர் அரசியல் அபிலாசைகளை புறந்தள்ளி சலுகை அரசியலுக்குள் முடக்கிக்கிடக்கும் அரசியல் தரப்புக்கள் விமர்சித்தாலும் நாம் ஐயங்கொள்ளப்போவதில்லை. தமிழ்த் தேசியத்தின்பால் பற்ருறுதி கொண்ட மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன் பயணிப்போம் என்பதை உறுதிபகர்கின்றோம்.

ஆனபோதிலும் கடந்த மற்றும் இந்த ஆண்டுகளில் அரசியல் தரப்புக்களிடமிரந்து கடுமையான நெருக்கடியினை எதிர்கொண்டு பயணத்திருக்கின்றோம் என்ற செய்தியையும் பகிர்ந்து செல்லவேண்டியிருக்கின்றது. தமிழர்களின் உரிமைப் போராட்டங்களுக்கு எதிராக நின்று தமிழர்களின் வாக்குகளைப் பொறுக்கியபின் தமிழர் விரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் தரப்புக்களை தொடர்ச்சியாக அம்பலப்படுத்தியதன் வெளிப்பாடே இந்த நெருக்கடிகளுக்கு காரணம் என்று நினைக்கின்றோம்.

எனினும் எமது பயணம் அதே உறுதியுடனும் தன்னம்பிக்கையுடனும் தொடரும். இதற்கு வாசகர்களாகிய மக்களின் ஆதரவும் ஒத்துளைப்புமே எம்மை வலுப்படுத்தும்.

வர்த்தகர்கள் – ஆதரவாளர்கள் உதவிடுங்கள்

வாகீசத்தின் பணியாளர்கள் பெரும்பாலும் தமக்கான வேறு பணிகளை வைத்துக்கொண்டு வாகீசத்தை ஒரு மக்கள் பணியாகவே மேற்கொண்டுவருகின்றோம் என்பது யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கடந்த ஆண்டு இரவு நேர செய்திப் பதிவேற்றங்களை நடத்திவந்த வாகீசம் தற்போது 24 மணி நேர செய்திப் பதிவெற்றங்களை மேற்கொண்டுள்ளது. எனினும் இணையத்தை பராமரிப்பதற்கான செலவுகளைச் சமாளிப்பதென்பது கொஞ்சம் கடினமான நிலைமைதான். வாகீசத்தில் விளம்பரம் செய்யும் வர்த்தகர்களை நம்பியே எமது பயணம் பயணிக்கிறது. ஆனாலும் விளம்பரங்களை நம்பியிருக்கும் இன்றைய உலகில் எமக்கு விளம்பரம் பெறுவது குதிரைக் கொம்பான நிலைமைதான். இதுவரையான காலத்தில் எமக்கு ஒத்துளைத்த வர்த்தகப் பெருந்தகைகளிற்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

வாகீசத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வர்த்தகர்கள் மற்றும் நிதிசார் ஆதரவாளர்களின் பங்களிப்பினை இந் தருணத்தில் எதிர்பார்க்கின்றோம்.

வாகசர்கள் விளம்பரதாரர்கள் நலன்விரும்பிகள் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

தூயவை துணிவோம்

நன்றி

வாகீசம் இணையக் குடும்பத்தினர்
தொடர்புகளிற்கு – vakeesamnews@gmail.com
0094 777 795 743

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com