சற்று முன்
Home / செய்திகள் / மகிந்தவுக்கு எதிராக கையெழுத்துப் போட மறுத்த சாள்ஸ் நிர்மலநாதன் எம்.பி கட்சி தாவுவாரா ?

மகிந்தவுக்கு எதிராக கையெழுத்துப் போட மறுத்த சாள்ஸ் நிர்மலநாதன் எம்.பி கட்சி தாவுவாரா ?

முன்னாள் ஜனாதிபதி ​மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தமை மற்றும் அதற்குப் பின்னர் இடம்பெற்ற அனைத்து நடவடிக்கைகளும் சட்டவிரோதமானவை என்றுக் குறிப்பிட்டு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்ட யோசனையொன்று நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் கையெழுத்திடவில்லை என்ற தகவல் வெளிவந்துள்ளது.

நாடாளுடன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று (02) நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் 119 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றியிருந்தபோதும் 118 உறுப்பினர்களே மகிந்த ராஜபக்சவிற்கு எதிரான யோசனையில் கையெழுத்திட்டிருந்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி.​பெரேராவினால் முன்வைக்கப்பட்ட இந்த​ யோசனை, நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் வழிமொழியப்பட்டிருந்தது.

குறித்த கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் கட்சிகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பியும் பங்பேற்றிருந்தன. எனினும் கூட்டம் முடியும்வரை கைஒப்பமிடாதவர் எந்தக் கட்சியைச் சேர்ந்த யார் உறுப்பினர் என தெரிந்திராதபோதும் பின்னர் சார்ல்ஸ் நிர்மலநாதனே கையெழுத்திட்டிருக்கவில்லை எனத் தெரியவந்து அவ்விடயம் சுமந்திரனின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டதாகக்கூறப்படுகின்றது.

இதேவேளை சார்ல்ஸ் நிர்மலநாதன் தனக்கு வெளியில் வேறு வேலை இருப்பதால் கூட்டத்திற்கு சிறிது தாமதித்தே வருவதாக கூறியிருந்ததாகவும் அவர் வந்தபின்பே கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டபோதும் அவர் கையெழுத்திட்டிருக்கவில்லை என்பது தெரியவந்ததாகவும் கூட்டமைப்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

முன்னராக சார்ல்ஸ் நிர்மலநாதன் மகிந்த அணியுடன் இணையப்போவதாகவும் அவருக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தபோதிலும் அதனை அவர் மறுத்துவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

About Jaseek

One comment

  1. Oh! Thanks for important News! God bless u all!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இலங்கையில் கொரோனா 3 ஆவது அலையில் 64 நாட்களில் 1816 பேர் மரணம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் மூன்றாவது அலையால் ஏப்ரல் 15ஆம் திகதி முதல் இதுவரை 1,816 ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com