2009 மே மாதம் 19 ஆம் திகதி தமிழர்கள் கூட்டாக படுகொலை செய்யப்பட்ட இறுதி நாள் தமிழினப் படுகொலை நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது.
வன்னிப் போரில் பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்களை இலங்கை அரசபடைகளும் அதன் நட்பு நாடுகளும் இணைந்து படுகொலை செய்து போரை முடிவுக்குக் கொண்டுவந்தன. சரணைடைந்த போராளிகளும் படையினரிடம் கையளிக்கப்பட்ட பொதுமக்களும் என பலர் காணால் ஆக்கப்பட்டனர். பின்னாளில் பலர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்த படங்கள் வெளியாகியிருந்தன. பலர் என்ன ஆனார்கள் என இதுவரை பதிலேதுமில்லை.
இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்தனர்.