முன்னாள் போராளிகளிடமாவது அரசியல் நடிப்புக்களை அரங்கேற்றாது விடலாமே !!

இது யாருடைய புகழ்ச்சிக்காகவும் இகழ்ச்சிக்காகவும் எழுதப்பட்டது அல்ல ஒரு உண்மைச் சம்பவம் இரண்டு தினங்களுக்கு முன்னர் ஒரு முன்னாள் போராளியை சந்தித்தோம். அவர் கூறிய சம்பவங்கள் இங்கு அப்படியே தருகின்றோம்.

தகவல் – நன்றி (யாழ் எயிட் – Yarl Aid)

—————————————————————–

அவர் ஒரு முன்னாள் பெண் போராளி, திருமணமாகி இரண்டு பிள்ளைகளின் தாய், தற்போது கிளிநொச்சியில் வாசிக்கின்றார். உடன் பிறந்த 3 சகோதரர்கள் போராளிகளாகவும் மேலும் ஒரு சகோதரன் எல்லைப்படை வீரனாகவும் இந்த மண்ணுக்காக விதையாகிப்போயினர். கணவர் ஒரு முக்கிய போராளி இறுதிப்போரின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர். இவ்வாறு தனது குடும்பத்தையே இவ் மண்ணின் சுதந்திரப் போராட்டத்திற்கு அர்பணிந்து வாழ்ந்த குடும்பம் இன்று நிலையாக வாழ்வதற்கு ஓர் இடம் இன்றி வீடு இன்றி தனது ஒரு மகனையும் மகளையும் படிப்பிப்பதற்கு கூட வருமானமின்றி வறுமையுடன் பசியுடன் வாழுகின்றார்கள்.

இன்று என்ன சாப்பிட்டீர்கள்? இது அவரிடம் கேட்ட வினா இன்று பக்கத்து விட்டு ஆட்கள் ஒரு கிலோ அரசி தந்தார்கள் அதை கஞ்சியாக்கி உண்டோம்.. அப்ப நேற்று. பக்கத்து கோவிலில் அன்னதானம் என்றார்.

இத்தனை உடன் பிறந்த சகோதரங்களையும் தனது கணவனையும் இழந்த அந்த முன்னாள் பெண் போராளி தனது பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்திற்காக உதவி பெறும் பொருட்டு கிளிநொச்சியைப் பிரதிநிதிப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை அவரது அலுவலகத்தில் நேரில் சந்திக்கின்றார். அச்சமயம் குறித்த பாராளுமன்ற உறுப்பினருடன் கிளிநொச்சி மாகாணசபை உறுப்பினர்;, தற்போது புதிதாக கரைச்சி பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட ஒரு உறுப்பினரும் இருந்துள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர் அந்த முன்னாள் போராளியின் நிலமையைக் கேட்டறிந்த பின்னர் அவருக்கு தேவையானதை செய்து கொடுக்குமாறு அவர்களுக்கு கூறிச் சென்று விட்டார்.

மாகாணசபை உறுப்பினர் உங்களுக்கு 6 ஆயிரம் ரூபா தருவதாக கூறினார்( மாதாந்தம் அல்ல) பிரதேச சபை உறுப்பினர் பிள்ளைகளின் கற்றலுக்கு தேவையான கற்றல் உபகரணங்கள் தருவதாக கூறினார்.

சில நாட்களின் பின்னர் குறித்த பிரதேச சபை உறுப்பினர் தொடர்பு கொண்டு நீங்கள் அலுவலகத்திற்கு வரவேண்டாம் கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலுக்கு முன் நில்லுங்கள் நான் தருகின்றேன் என்றார். அந்த முன்னாள் போராளியும் காலை பிள்ளைகளை பாடசாலையில் கொண்டு போய் விட்டு விட்டு கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் நின்று குறித்த பிரதேச சபை உறுப்பினருக்கு தொலைபேசியில் அழைப்பு எடுத்தார். பதில் ஏதுவும் இல்லை சிறிது நேரத்தின் பின்னர் குறித்த பிரதேச சபை உறுப்பினரிக் தொலைபேசியும் செயல் இழந்து விட்டது.

காலை 8 மணிக்கு அவ்விடத்திற்கு வந்தவர் ஒரு மணி வரை அங்கேயே நின்று இருக்கின்றார். அவர் ஒரு இருதய நோயாளி அதனால் தான் தனது கணவன் காணாமல் போனபோதும் காணாமல்போனவர்களின் போராட்டத்தில் பங்கு பற்ற வேண்டாம் என காணமல் போனோர் சங்கத்தனரே அவருக்கு கூறியிருந்தனர். அப்படிபட்ட நிலையிலும் அந்த போராளி தனது பிள்ளைகளுக்காக ஒரு சில கற்றல் உபகரணங்களை எதிர் பார்த்து பல மணி நேரம் காத்திருந்தார். தொiபேசித் தொடர்பு இல்லாத காரணத்தால் மீண்டும் பிள்ளைகளை பாடசாலைகளில் ஏற்றிக் கொண்டு வீடு திரும்பி விட்டார்.

பின்னர் பிரதேச சபை உறுப்பினர் தொடர்பு கொண்டு மீண்டும் வருமாறு கூறியுள்ளார். ஆனால் அப் போராளி தனக்கு இவ்வி உதவி வேண்டாம் என்று மறுத்து விட்டார். அவருடைய மகனும் இவ்வளவு அவமானப்பட்டு உதவி பெற வேண்டியது இல்ல என்று தாயை தடுத்து விட்டான். அத்துடன் அவரின் மகன் கல் அகழும் வேலைக்குச் செய்து கிடைத்த 1300 ரூபா பணத்தில் தனக்கும் தனது தங்கைக்கும் தேவையான கற்றல் உபகரணங்களை வாங்கிக் கொண்டான்.

அடுத்தது மாகாண சபை உறுப்பினர். தனது நிதி ஒதுக்கீட்டில் 6 ஆயிரம் ரூபா தருவாதாக கூறியிருந்தார் ;(மாதாந்தம் அல்ல) அதைக் கேட்டு உறுப்பினரின் வீட்டுக்கு பல முறை சென்று இருக்கின்றார். உதவி பெற முடியவில்லை. ஒரு முறை மாகாணசபை உறுப்பினரின் மோட்டர் சைக்கிள் வீட்டுக்கு முன்னால் நின்றது ஆனால் அவரது மனைவி அவர் வீட்டில் இல்லை என்று கூறி அனுப்பி விட்டார்.

பின்னர் ஒரு நாள் தனது மகளை ரியுசன் ஒன்றுக்கு மாகாணசபை உறுப்பினரின் வீட்டு வழியே கூட்டிச் சென்று கொண்டிருக்கும் போது மாகாணசபை உறுப்பினரின் மனைவி வீட்டு வாசலில் நின்று உள்ளார். அப்போது அந்த முன்னாள் போராளி குறித்த மாகாணசபை உறுப்பினரின் பெயரைக் கூறி அவர் எத்தனை தரம் என்னை ஏமாற்ற போகின்றார் என்று பார்க்கத்தான் போகின்றேன் என்றிருக்கின்றார்.

அதற்கு மாகாணசபை உறுப்பினரிக் மனைவி உந்த ஏமாத்துகின்ற தேவையில்லாத கதை ஒன்றும் கதைக்க வேண்டாம் என்று கூறியிருக்கின்றார். அதற்கு அந்த போராளி அக்கா இதில கொஞ்சம் நில்லுங்கள் மகளுக்கு ரியூசனுக்கு நேரம் போயிற்று கொண்டு போய் விட்டு விட்டு வந்து கதைக்கின்றேன் என்று கூறிச் சென்று மறுபடியும் வந்தார்.

அக்கா இந்த மண்ணுக்காக நான் இத்தனை உடன்பிறப்புக்களை இழந்துள்ளேன் எனது கணவன் என்ன ஆனார் என்று தெரியவில்லை. நாங்கள் பசியுடனும் பிள்ளைகள் படிப்பதற்கு கொப்பிகள் இன்றியும் கஸ்டப்படுகின்றோம் ஏன் இப்படி எங்களை அவர் ஏமாத்துகின்றார் என்று கேட்டிருக்கின்றார்

அதற்கு அந்த மாகாணசபை உறுப்பினரின் மனைவி இந்த மண்ணுக்காக உங்கள் சகோதரர்களை சாகச் சொல்லி நாங்கள் சொன்னமா என்று கேட்டு இருக்கின்றார். அந்த போராளியும் சென்று விட்டார்.

கடந்த வருடம் நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாள் அதன் சகோரர்களுக்கு விளக்கேற்றுவதற்கு அந்த போராளியும் சென்றுள்ளார். அங்கு குறித்த மாகாணசபை உறுப்பினரும் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்திக் கொண்டு நின்றுள்ளார். தீபம் ஏற்றும் போது அந்த பெண் போராளி கத்தி அழுதாள் ‘அண்ணாக்களே உங்களை இந்த மண்ணுக்காக சாகச் சொல்லி நாங்கள் கேட்டோமா என்று என்னிடம் கேட்கின்றார்கள்’ என்று..

அந்த பெண் போராளி இத்தனை தியாகத்தை இந்த மண்ணுக்காக செய்த உரிமையுடன் அவ் மாவீர்களின் தியாகத்தை மேடையில் முழங்கி பெற்ற வாக்குகளால் மக்கள் ப்pரதிகள் ஆகியவர்களிடம் உதவி கேட்டாள். அவள் தனக்கு ஒரு வீடு கேட்க வில்லை. ஆட்ம்பர வாகனம் கேட்கவில்லை. காணி கேட்கவில்லை. உண்பதற்கு பீசாவும் புரியாணியும் கேட்கவில்லை கேட்டது தனது பிள்ளைகளின் கல்விக்கான கற்றல் உபகரணங்கள் அதைக் கூட அவர்கள் வழங்குவதற்கு தயார் இல்லை. ஒரு சாதாரண பொது மகனைக்கூட இவ்வளவு தூரம் ஏமாற்றக்ககூடாது அவ்வாறு இருக்கையில் எமது இனத்திற்கு முகவரி தந்த இவ்வாறனவர்களை அவமானப்படுத்துவது ஏற்புடையதா? இது யாருடைய தவறு? இதில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதேச சபை உறுப்பினர் இம் முறை பிரதேச சபை தவிசாளர் பதவிக்கும் போட்டியிடவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இக்குடும்பத்திற்கு யாழ்.ஏய்ட் நிறுவனம் 130,000 பெறுமதியான 10 லீற்றர் பால் தரக்கூடிய பசு மாடு ஒன்றையும் அதற்கான ஒரு தொகுதி தீவனத்தையும் பிள்ளைகளின் கற்றலுக்குத் தோiயான கற்றல் உபகரணங்களையும் மற்றும் உணவுப் பொருட்களையும் வழங்கியது கண்ணீர் நிறைந்த நன்றியுடன் பெற்று கொண்டாள் அந்த போராளி.

  

வணக்கம் வாசகர்களே

இக் கட்டுரை யாழ் எயிட் – Yarl Aid தன்னார்வத் தொண்டு நிறுவனத்திடமிருந்து பெறப்பட்டு வாகீசத்தின் அடையாளம் ஊடாக பிரசுரிக்கப்படுகின்றது. கண்டுகொள்ளப்படாமலிலுக்கும் சமூக அவலங்களை வெளிக்கொணர்வதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை பெற்றுக்கொடுப்பவர்களுக்கு ஒரு சமூக ஊடகமாக துணைநிற்பதும் எமது பொறுப்பாகும்.
உங்கள் தன்னார்வப் பணிசார்ந்த தகவல்களையும் பகிர்ந்துகொள்ள vakeesamnews@gmail.com எனும் மின்னஞ்சல் ஊடாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நன்றியுன்
அடையாளம்
வாகீசம் ஊடகப்பிரிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com