முன்னாள் சபாநாயகரும், அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எச் மொஹமட் தனது 95 ஆவது வயதில் இன்று(26) காலமானார்.
கொழும்பு மாநகர சபையூடாக அரசியலில் பிரவேசித்த அவர் மாநகர சபையின் மேயராகவும் பதவி வகித்துள்ளார். பின்னர் பாராளுமன்றத்திற்கு தெரிவான எம்.எச்.மொஹமட், டட்லி சேனாநாயக்க அரசாங்கத்தில், தொழில் மற்றும் வீடமைப்பு அமைச்சராகவும் பதவி வகித்திருந்தார்.
மேலும் பல அமைச்சுப் பதவிகளையும் வகித்திருந்த எம்.எச்.மொஹமட் பாராளுமன்றத்தின் 14 ஆவது சபாநாயகராக செயற்பட்டார்.
பொரளை பௌத்தாலோக மாவத்தையிலுள்ள அன்னாரின் வீட்டில் ஜனாசா வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று பிற்பகல் குப்பியாவத்தை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.