சுவீடன் வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் அழைப்பின் பிரகாரம் சுவீடனின் வெளிவிவகார அமைச்சர் மார்கட் வோல்ட்ஸ்ரம் (Margot Wallstrom) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று(24) இலங்கைக்கு வரவுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வுள்ள சுவீடன் வெளிவிவகார அமைச்சர் , அமைச்சர் மங்கள சமரவீரவுடன் நாளைய தினம்(25) உத்தியோகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சபாநாயகருடனும் சுவிடன் வெளிவிவகார அமைச்சர் மார்கட் வோல்ட்ஸ்ரம் உத்தியோகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சுவீடன் வெளிவிவகார அமைச்சருடன் அந்நாட்டின் முன்னணி வர்த்தக துறையின் 7 பிரதிநிதிகளும் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மேலும் சுவீடன் வெளிவிவகார அமைச்சரின் இலங்கைக்கான விஜயத்தில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை(26) வடக்கிற்கு சென்று, வட மாகாண ஆளுநர், முதலமைச்சர் மற்றும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோரை சந்தித்து கலந்தரையாடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் போது நலன்புரி முகாம்களிற்கும் செல்லவுள்ளதுடன், சிவில் அமைப்புகளையும் சந்திக்கவுள்ளதாகவும், மறவன்புலவு வீட்டுத் திட்டத்தையும் சுவீடன் வெளிவிவகார அமைச்சர் கண்காணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவீடன் வெளிவிவகார அமைச்சரின் இலங்கைக்கான விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வுள்ளதுடன், வர்த்தக துறையிலான ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்தவும் எதிர்பார்பதாகவும் வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com