சற்று முன்
Home / பிரதான செய்திகள் (page 5)

பிரதான செய்திகள்

கடவுச்சீட்டு, விசா வழங்கல் மூலம் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு 20 பில்லியன் ரூபா வருமானம்

வெளிநாடுகளுக்கு செல்வதற்காக கடந்த 2022 ஆம் ஆண்டின் இறுதி வரை 9 லட்சத்து 11 ஆயிரத்து 693 பேர் கடவுச்சீட்டுக்களை பெற விண்ணப்பித்திருந்ததாக குடிவரவு,குடிகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் ஹர்ச இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார். அதேவேளை கடவுச்சீட்டு விநியோகம் மற்றும் இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டவர்களுக்கு விசா அனுமதிகளை வழங்க அறவிடப்பட்ட கட்டணங்கள் மூலம் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திற்கு ...

Read More »

ஏற்படுத்திய அழிவுக்காக வரலாற்றில் ஜனாதிபதி ஒருவர் பதவியை கைவிட நேரிட்டது: பைசர் முஸ்தபா

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் செயற்பாடுகள் காரணமாகவே நாட்டுக்கு தற்போதைய அழிவு ஏற்பட்டதாக முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார். கோட்டாபாய ராஜபக்சவின் செயற்பாடுகளே இந்த அனர்த்தம் ஏற்பட்டது. இப்படியான மிகப் பெரிய அழிவை ஏற்படுத்தியதன் காரணமாவே வரலாற்றில் முதல் முறையாக ஜனாதிபதி ஒருவருக்கு தனது ...

Read More »

முட்டை தட்டுப்பாடு ஜூன் மாதத்திற்குள் முடிவுக்கு வரும்!

முட்டை தட்டுப்பாடு ஜூன் மாதத்திற்குள் முடிவுக்கு வரும் என்று வர்த்தக, வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் பிரியங்கா அத்தபத்து தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது நாளாந்தம் 3 மில்லியன் முட்டைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 44 ரூபாவாகவும் சிவப்பு முட்டை ஒன்றின் அதிகபட்ச ...

Read More »

மாணவர்கள் சென்ற பஸ் நானுஓயாவில் விபத்து – 7 பேர் பலி – பலர் படுகாயம் !

நானுஓயாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும் பஸ்ஸில் பயணித்த 41 பாடசாலை மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.உயிரிழந்தவர்களில் வேனில் பயணித்த 6 பேரும், முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவருமே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் சென்ற பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்நிலையில் குறித்த பஸ் பள்ளத்தில் வீழ்ந்திருப்பதால், மீட்பு ...

Read More »

போராடுவதற்கு ஜனநாயக உரிமை இல்லாத நிலையில் சுதந்திர தினம் தேவைதானா?

நாட்டில் சுதந்திரம் இல்லாத நிலையில் ஏன் சுதந்திர தினத்தை கொண்டாடப் போகின்றார்கள் என்று மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்க கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். கடந்த காலத்தில் நாட்டில் கொடுங்கோல் ஆட்சி புரிந்த ஆட்சியாளர்களை விரட்டுவதற்கு ஜனநாயக ரீதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ...

Read More »

கிளிநொச்சியில் இரண்டாக உடைந்தது தமிழரசு – சிறிதரன் அணிக்கு எதிராக சுமந்திரன் அணி சுயேட்சையாக போட்டி

கிளிநொச்சி மாவட்டத்திற்குற்பட்ட கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைகளில் சுயேட்சை குழுவாக ஒன்றினைந்து போட்டியிட தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், கரைச்சி பிரதேச சபை பின் முன்னாள் உப தவிசாளர் உள்ளிட்ட ஏராளமான கட்சி ஆதரவாளர்கள் செயற்பாட்டாளர்கள் முடிவெடுத்துள்ளனர். தமிழரசு கட்சியின் மாவட்ட தலைமை ...

Read More »

யாழ் மாவட்ட அரசாங்க அதிபருடன் இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போதொட்ட சந்திப்பு!

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களை யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போதொட்ட அவர்கள் மரியாதை நிமித்தமாக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினாா். இக்கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் விடுவிக்கப்படாத காணிகளின் விபரங்கள் தொடர்பாகவும் முகாம்களில் தங்கியுள்ள குடும்பங்களை மீளக்குடியேற்றுதல் தொடர்பாகவும்விவசாயம் சார் உற்பத்திகளை ஊக்குவித்தல் மற்றும் ...

Read More »

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றில் வழக்கு

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றில், முழங்காவில் அன்புபுரம் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் மற்றும் கொழும்பினை தலைமையகமாக கொண்ட வினிவித பௌன்டேஷன் ஆகிய அமைப்புக்களின் பிரதிநிதிகளினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் கடல் வளத்திற்கும் கடற்றொழிலாளர்களுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும், இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்ட விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு போதுமான ...

Read More »

இலங்கைக்கான ஒத்துழைப்பை வழங்க அமெரிக்க தயார்: அமெரிக்க தூதுவர் ஜூலி சங்

சர்வதேச நாணய நிதியத்தின் உதவிக்காக இலங்கைக்கு ஒத்துழைப்பை வழங்க தயார் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டம் குறித்த இந்தியாவின் உறுதிப்பாட்டை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் கடன் நெருக்கடிக்கு சமமான நியாயமான தீர்வை வழங்குவதற்கு அனைத்து ...

Read More »

பாடசாலை விடுமுறை தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்படவுள்ளது. 2022 ஆம் கல்வியாண்டின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை நிறைவடைவதுடன், கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகிறது. 2022ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை இறுதிகட்ட கற்றல் நடவடிக்கை பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com