சற்று முன்
Home / செய்திகள்

செய்திகள்

கிளிநொச்சி ஊடகவியலாளர் நிபோஜன் புகையிரத விபத்தில் உயிரிழப்பு!

கிளிநொச்சி ஊடகவியலாளரான எஸ்.என் நிபோஜன் கொழும்பில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். கொழும்பு தெஹிவளை பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற புகையிரத விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். சடலம் அங்கிருந்து மீட்கப்பட்டு கொழும்பு களுபோவில வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் சுயாதீன ஊடகவியலாளராக கடமையாற்றி வந்த எஸ்.என். நிபோஜன், பல அச்சுறுத்தல்கள் மத்தியிலும் கிளிநொச்சியில் ...

Read More »

சந்திரமுகி 2 திரைப்படம் குறித்த ஸ்பெஷல் அப்டேட்டை பகிர்ந்துள்ள நடிகை கங்கனா ரணாவத்

பாலிவுட் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரணாவத். இவர் தமிழில் தாம் தூம், தலைவி உள்ளிட்ட படங்களில் நடித்து அனைவருக்கும் பரீட்சையமானார். இவர் தற்போது பி.வாசு இயக்கத்தில் உருவாகி வரும் சந்திரமுகி 2 திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து வரும் இப்படத்தில் ராதிகா சரத்குமார், மனோ ...

Read More »

யாழ் போதனா வைத்திய சாலையில் மேற்கொள்ளப்பட்ட சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை வெற்றி

யாழ் போதனா வைத்திய சாலையில் மேற்கொள்ளப்பட்ட சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை வெற்றி அளித்துள்ளமையானது ஒரு வரலாற்று சாதனை என வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த, சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில். கடந்த வாரம், சிறுநீரகம் பாதிக்கப்பட்ட ...

Read More »

யாழ்.மருதங்கேணி பிரதேசத்தில் கடலில் நீராடிய 15 வயது சிறுவனை காணவில்லை!

யாழ்ப்பாணம், மருதங்கேணி மாமுனை பிரதேசத்தில் கடலில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை நீராடச் சென்ற மூவரில் 15 வயது சிறுவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். காணாமல் போன சிறுவன் நாகர்கோவில் கிழக்கு நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. மற்றுமொரு சிறுவன் நீரில் மூழ்கிய நிலையில், மீட்கப்பட்டு,  பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  காணாமல் போன ...

Read More »

கீர்த்தி சுரேஷின் திருமணம் பற்றி அவர் அம்மா மேனகாவின் பதில்!

நடிகை கீர்த்தி சுரேஷ் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. கடந்த சில வருடங்களாகவே இப்படி ஒரு செய்தி பரவுவதும் அதன் பின் கீர்த்தி குடும்பத்தினர் விளக்கம் கொடுப்பதுமாக பல முறை நடந்திருக்கிறது. தற்போது கீர்த்தி அவரது பள்ளி நண்பர் ஒருவரை காதலித்து வருவதாகவும், 10 வருட காதலுக்கு ...

Read More »

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான குற்றவாளியை யார் மறைத்தார்கள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறி ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் பலர் இன்று (30) சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு வருகை தந்துள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மற்றும் அரசியல் அதிகாரத்திற்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களம் முன்வைத்த தகவலின் பிரகாரம் குற்றவியல் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஐக்கிய மக்கள் ...

Read More »

அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் மருந்து உட்கொள்வோருக்கு அவசர எச்சரிக்கையொன்று வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்நாட்களில் பதிவாகும் காய்ச்சலின் அறிகுறிகளும், டெங்கு நோயின் அறிகுறிகளும் பெரும்பாலும் ஒத்திருப்பதாக வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனவே நோயின் நிலையைத் தீர்மானிக்காமல் உட்கொள்ளும் மருந்துகளால் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை இலங்கையில் மீண்டும் வரலாறு காணாத உயர்வை பதிவு ...

Read More »

போதைப்பொருள் கடத்தல்காரர் ஹெரோயின் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் கைது!

“டிஸ்கோ” என அழைக்கப்படும் தர்மகீர்த்தி உதேனி இனுக பெரேரா என்ற பாரிய போதைப்பொருள் கடத்தல்காரர் ஹெரோயின் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடுவெல பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடைய அவரிடம் இருந்து 4 கூரிய ஆயுதங்கள் மற்றும் 14 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபர் தற்போது பிரான்சில் ...

Read More »

A/L பெறுபேறுகளின் அடிப்படையில் ஆட்சேர்ப்பா?

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு உயர்தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் ஆட்களை நியமிக்கும் நடைமுறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்திற் கொண்டு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் வேகமாக நாட்டை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளதாகவும் அனுபவம் வாய்ந்த திறமையான விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் நாட்டை விட்டு ...

Read More »

அரச சேவையிலுள்ள 20ஆயிரம் பட்டதாரிகளை ஆசிரியர்களாக இணைத்துக் கொள்ள நடவடிக்கை

பாடசாலைகளில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களை நிரப்பும் நோக்குடன் அரச சேவையில் உள்ள 20 ஆயிரம் பட்டதாரிகளை ஆசிரியர்களாக இணைத்துக் கொள்வதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இது பற்றிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை சமர்ப்பிக்கலாம். இணையதளத்தின் ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். 2018 – 2019 மற்றும் 2020ம் ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com