சற்று முன்
Home / அரசியல் கட்டுரைகள் (page 9)

அரசியல் கட்டுரைகள்

நீதியிலிருந்து ஊற்றெடுக்காத நல்லிணக்கம்? – நிலாந்தன்

கடந்த மாதம் கொழும்பில் சிவில் சமூகப் பிரதிநிதிகளை வெளியுறவு அமைச்சர் சந்தித்தார். இதன் போது அவர் ஒரு தகவலைத் தெரிவித்தார். இலங்கைத்தீவின் நல்லிணக்க முயற்சிகளுக்காக ஏறக்குறைய 450 மில்லியன் டொலர்கள் வழங்கப்படவுள்ளதாம். இதைப் போலவே அண்மையில் தென்னாபிரிக்காவில் நிகழ்ந்த ஒரு சந்திப்பின் போது ஜஸ்மின் சூக்கா இதையொத்த மற்றொரு தகவலை வெளியிட்டிருக்கிறார். தென்னாபிரிக்கா, சியாரா லியோன், ...

Read More »

விக்கினேஸ்வரன் எதிர் சுமந்திரன் – அறிக்கைப்போரின் பார்வையாளர்களா தமிழ் மக்கள்? – நிலாந்தன்

விக்கினேஸ்வரனுக்கும் சுமந்திரனுக்கும் இடையிலான முரண்பாடு எனப்படுவது ஒரு தனிப்பட்ட முரண்பாடு அல்ல. தமிழ் அச்சூடகங்களில் ஒரு பகுதியும் இணைய ஊடகங்களில் ஒரு பகுதியும் சித்தரிப்;பது போல அது சுழலும் சொற்போரும் அல்ல. விக்கினேஸ்வரனின் அறிக்கையில் கூறப்படுவது போல கொழும்பு மையநோக்கு நிலைக்கும் தமிழ் மைய நோக்கு நிலைக்கும் இடையிலான ஓரு முரண்பாடு மட்டும் அல்ல. அல்லது  ...

Read More »

அரசியல் கைதிகளின் விவகாரம் எப்படி முடியும்? நிலாந்தன்

அரசியல் கைதிகளின் விவகாரம் எனப்படுவது அதன் ஆழமான பொருளில் ஓர் அரசியல் விவகாரமே. ஆனால் அதை ஒரு சட்ட விவகாரமாகச் சுருக்கிவிட அரசாங்கம் முற்படுகின்றது. இவ்வாறு ஓர் அரசியல் விவகாரத்தை  சட்ட விவகாரமாக  சுருக்கும் ஓர் அரசியல் சூழலில் நிலைமைகளை எதிர்கொள்ளத் தேவையான துறைசார் நிபுணத்துவமும், தீர்க்கதரிசனமும்,அர்ப்பணிப்பும் தமிழ் மக்களிடம் உண்டா?அரசியல் கைதிகளின் விவகாரம் அதன் ...

Read More »

அமெரிக்கவின் முதல் பெண் அதிபர் ஆவாரா ஹிலாரி ??

அமெரிக்கா, தனது முதல் பெண் அதிபரைத் தேர்ந்தெடுத்து முடித்துவிட்டது. வாக்குப்பதிவு, கணக்கெடுப்பு, அதிகாரபூர்வ அறிவிப்பு போன்ற சம்பிரதாயங்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. வேறு எவரையும்விட ஹிலாரி கிளின்டன் இதை நன்றாகவே உணர்ந்திருக்கிறார். ‘எதிர்காலத்தில் உன்னாலும் அதிபராக முடியும் என, ஒரு தந்தை தன் பெண் குழந்தையிடம் இனி தைரியமாகச் சொல்லலாம்’ என்று புன்னகைக்கிறார் ஹிலாரி. ‘பராக் ஒபாமாவின் ...

Read More »

தமிழினியை முன்வைத்து ஈழத்தமிழர்கள் சிந்திக்க வேண்டியவை – நிலாந்தன்

2009 மே18 இற்குப்பின் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்து விடுவிக்கப்பட்டவர்கள் மத்தியில் அதிகம் பிரபல்யமான ஒருவராக  தமிழினி காணப்பட்டார். இதுவரை   தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களுள் ஒப்பீட்டளவில் உயர் மட்ட பிரதானிகளில் ஒருவராகவும் அவர் காணப்பட்டார். இவை காரணமாகவே அவருடைய மறைவும் அதிகம் கவனிப்பைப் பெற்றிருக்கிறது.  அவருடைய இறுதி நிகழ்வை உற்றுக் கவனித்தவர்களும் அவரோடு நெருங்கிப் பழகியவர்களும் பின்வரும் ...

Read More »

டேவிட் ஐயா: அவருடைய வாழ்க்கையே அவருடைய செய்தியா? – நிலாந்தன்

தனது பல தசாப்த கால  அலைந்த வாழ்வின் முடிவில்  கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு முன் நாடு திரும்பிய டேவிட் ஐயா  கடந்த வாரம் கிளிநொச்சியில் அமைதியாக இறந்து போனார். ஈழத்தமிழர்களின் பாரம்பரிய தாயகத்தின்  எல்லையோரக்  கிராமங்கள் நெடுக மைல் கணக்காக நடந்த கால்கள் கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் தமது பயணத்தை முடித்துக் கொண்டன. ஒரு செயற்பாட்டாளராக, கைதியாக, ...

Read More »

உண்மையை அச்சமின்றிச் சொல்லும் ஒரு விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்படுமா? – நிலாந்தன்

(பதிவு செய்த நாள் – புரட்டாதி 27, 2015, 10.26 பி.ப) போர்க் குற்ற விசாரணைகள் என்று வந்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தங்களுக்குத் தீங்கிழைத்தவர்களைப் பெயர் சொல்லிச் சுட்டிக்காட்டக்கூடிய நிலைமைகளே அதிகம் உண்டு. ஏற்கனவே உருவாக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் முன் தோன்றிய  பல சாட்சிகளும் அவ்வாறு ஏற்கனவே பெயர்களைக் குறிப்பிட்டிருக்கின்றார்கள். இந்நிலையில் வெளிப்பார்வையாளர்கள் அதாவது வெளிநாட்டவர்கள் பங்குபற்றும் ...

Read More »

நெளிய வைத்த வீரமணி… நெகிழ வைத்த மல்லை சத்யா!

கூட்டணி யூகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த வைகோ பேரறிஞர் அண்ணாவின் 107-வது பிறந்தநாள் விழா மற்றும் திராவிட இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டை திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் பிரமாண்டமாக நடத்தி முடித்திருக்கிறது ம.தி.மு.க. மக்கள் நல கூட்டியக்கத்தின் தொடக்கம், கூட்டணி தொடர்பாக ம.தி.மு.க-வினரிடம் எழுந்துள்ள சலசலப்பு, பாலவாக்கம் சோமு தி.மு.க-வில் இணைந்தது என ம.தி.மு.க-வை மையப்படுத்தி அதிர்வுகள் ...

Read More »

அரசுகளின் நீதி – நிலாந்தன்

அனைத்துலக விசாரணை எனப்படுவது ஈழத்தமிழர்களின் ஒரு கூட்டுக் கனவு. தமிழர்களில் பெரும்பாலானவர்கள் அப்படி ஒரு விசாரணையைத்தான் கோரி நிற்கிறார்கள். தமிழ் மக்களின் ஆணையைப் பெற்ற கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் அப்படி ஒரு விசாரணைதான் கோரப்பட்டிருக்கிறது. ஆனால் அதே சமயம் கூட்டமைப்பு ஆட்சிமாற்றத்தின் பங்காளியாகக் காணப்படுகிறது. எனவே மாற்றத்தைப் பாதுகாக்க வேண்டிய கூட்டுப் பொறுப்பு கூட்டமைப்புக்கு உண்டு. ...

Read More »

சம்பந்தர் ஒருசிங்கள எதிர்க்கட்சித் தலைவரைப் போலவா செயற்படப் போகிறார்? – நிலாந்தன்

சம்பந்தர் எதிர்க்கட்சித் தலைவராகியதன் மூலம் சாதிக்கப் போவது என்ன? இக்கேள்விக்குரிய பதில் மற்றிருகேள்விகளில் இருந்தே தொடங்குகிறது. முதலாவதுகேள்வி, அவர் எதிர்க்கட்சித் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டதற்கான உள்நாட்டுப் பின்னணிஎது? இரண்டாவது கேள்வி அவர்  எதிர்க்கட்சித் தலைவராக தெரிவுசெய்யப்பட்டிருக்கும் பிராந்தியமற்றும் அனைத்துலக பின்னணி எது? முதலாவது கேள்வி. அவர் எதிர்க்கட்சித் தலைவராக ஏன் தெரிவுசெய்யப்பட்டார்? ஏனெனில்  யார் எதிர்க்கட்சியார் ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com