சற்று முன்
Home / கட்டுரைகள் (page 6)

கட்டுரைகள்

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி? – நிலாந்தன்

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் வவுனியாவில் இந்த வாரம் சாகும் வரையிலுமான உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நடாத்தினார்கள். உண்ணாவிரதிகளின் உடல்நிலை படிப்படியாக மோசமாகிக் கொண்டு வந்தது. நீரிழப்பினால் அவர்களுடைய உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்படுவதை ஒரளவுக்கு மழை தடுத்தது. அந்தப் போராட்டத்திற்கு படிப்படியாக வெகுசன ஆதரவு அதிகரிக்கத் தொடங்கியது. உண்ணாவிரதிகளின் உடல்நிலை மேலும் மோசமடைந்தால் அது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ...

Read More »

தோழர் தோழர் தோழர் – வரலாறு உருவான பின்னணி என்ன?

”உங்கள் குழந்தைகளை யாராவது போனில் அழைத்து, ‘தோழர்’ என்று பேசத் தொடங்கினால், உடனே அவர்களின் தொடர்புகளைத் துண்டிக்கச் செல்லுங்கள்” – தமிழகக் காவல்துறை அதிகாரியிடமிருந்து இப்படி ஒரு செய்தி சொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின்றன. ‘தோழர்’ என்ற வார்த்தை எப்போதுமே அதிகார வர்க்கத்தைக் குலைநடுங்கச் செய்வது. சாணிப்பாலும் சவுக்கடிக்கொடுமைகளும் நிறைந்த கீழத் தஞ்சை மாவட்டத்தில் ‘தோழர் பி.எஸ்.ஆர்’ ...

Read More »

நடராஜரைக் குளிர்விப்பதற்காய் ஓரங்கட்டப்பட்ட சுந்தரர்…! – யாழ்ப்பாண அரசியல் படும் பாடு

வழி தேங்காயை எடுத்து தெரு பிள்ளையாருக்கு அடித்த கதையாக முடிந்திருக்கிறது யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நூறாவது பிறந்ததினக் கொண்டாட்ட நிகழ்வுகள். யாழ்ப்பாணம் கல்வியங்காட்டைச் சேர்ந்தவர் சுந்தரலிங்கம்.  இவரை எல்லோரும் யாழ். எம்.ஜி.ஆர் என்றுதான் அழைப்பார்கள். எம்.ஜி.ஆர் மீது அளவுகடந்த மதிப்பும் பற்றுதலும் கொண்டாவர்தான் இந்த சுந்தரலிங்கம். எம்.ஜி.ஆர் போல நடை உடை பாவனை ...

Read More »

பொருந்துமா பொருத்து வீடுகள்? – நிலாந்தன்

போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு பொருத்து வீடுகளைக் கட்டிக் கொடுக்கப்போவதாக அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இது தொடர்பில் அமைச்சரவை தனது அங்கீகாரத்தை வழங்கி விட்டது. வரும் ஏழாம் திகதி இத்திட்டம் ஆரம்பிக்கப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை தமிழ்ப்பத்திரிகைகளில் இது தொடர்பாக ஒரு முழுப்பக்க விளம்பரம் பிரசுரிக்கப்பட்டுள்ளது. பொருத்து வீடுகளை தமிழ் மக்களின் பிரதிநிதிகளில் பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. வடமாகாண ...

Read More »

மாவீரர் நாள் 2016 – நிலாந்தன்

 இம்முறை தாயகத்தில் மாவீரர்நாள் ஒரு வெகுசன நிகழ்வாகவும் அனுஷ்டிக்கப்பட்டது. அரசியல்வாதிகளின் நிகழ்வாகவும் அனுஷ்டிக்கப்பட்டது. மே பதினெட்டுக்குப்பின் தாயகம் தமிழகம் டயஸ்பொறா ஆகிய மூன்று தரப்புக்களும் ஒரே நாளில் ஒரு விடயத்துக்காக உணர்வுபூர்வமாக ஒன்று திரண்ட மிக அரிதான நிகழ்வுகளில் அதுவும் ஒன்று. தாயகத்தில் அதை ஒரு வெகுசன நிகழ்வாக ஒழுங்குபடுத்திய அரசியல்வாதிகளே அதைத் தங்களுடைய நிகழ்வாகவும் ...

Read More »

வடக்கில் சிதைக்கப்படும் நிதிக் கட்டமைப்பு – மிரமிட் கட்டமைப்பிற்குள் நுளைந்து நடத்தப்பட்ட ஒரு வேட்டை (பாகம் 2)

“தனியார் நிறுவனங்களிலும் அரச நிறுவனங்களில் உத்தியோகம் பார்த்து மாத வருமானம் 40 ஆயிரத்தைக்கூடத் தாண்டுவதில்லை. நீங்கள் ஒரு மாத்தில் ஒரு இலட்சம் ரூபாய் பணத்தை பாட் ரைம் வேர் ஆக செய்தே உழைத்துக்கொள்ளலாம். இதுக்கு நீங்க என்ன செய்யணும்னா 1.5 புள்ளி மதிப்புள்ள பொருளை கொள்வனது செய்து அதை இரண்டு பேருக்கு அறிமுகப்படுத்தினால் போதும்.” இவ்வாறுதான் தொடங்குகின்றன அந்த ...

Read More »

பிக்குகளின் அரசியல் – நிலாந்தன்

மட்டக்களப்பில் மங்களாராமய விகாரையின் அதிபதி பட்டிப்பளைப் பிரதேச தமிழ் அரச ஊழியர்களை அவமானப்படுத்தும் வீடியோ பெரிய சர்ச்சையைத் தோற்றுவித்திருக்கிறது. பொலிசாரின் முன்னிலையில் மேற்படி விகாராதிபதி தமிழ் அரச ஊழியரை இனரீதியில் கீழ்மைப்படுத்தும் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தித் திட்டுகிறார். அங்கு பிரசன்னமாகியிருந்த பொலிஸ் அதிகாரிகள் அவரைக் கண்டிக்கவோ தண்டிக்கவோ முற்படவில்லை. மாறாக அவரை சமாதானப்படுத்துவதற்கு முற்படுகிறார்கள். ஒரு ...

Read More »

சிவசேனா எனும் வன்மம் – இங்கு எதற்கு? – தயாளன்

“மகாராஷ்டியம் மராட்டியர்களுக்கே” என்ற கோஷத்துடன் மதராசிகளை (தென்னகத்தவர்களை) குறிப்பாகத் தமிழர்களைத் தமது தாயகத்துக்கு மும்பையில் இருந்து விரட்டியனுப்பிய சிவசேனாவை எமது மண்ணில் அறிமுகப்படுத்தியுள்ளனர் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனும் மறவன்புலவு சச்சிதானந்தமும். கேரள கஞ்சா மற்றும் வயாகரா மாத்திரைகள் வரிசையில் தமிழரை நாசமாக்கவென்றே கொண்டுவரப்பட்டது தான் சிவசேனா. தமிழரின் ஆயுதப் போராட்டம் தோற்றிருக்கலாம் ...

Read More »

தமிழ் நோக்குநிலையிலிருந்து ஒரு புதிய யாப்பை எதிர் கொள்ளல் – நிலாந்தன்

புதிய அரசியல் யாப்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வும் இணைக்கப்பட்டால் பெரும்பாலும் வரும் ஆண்டில் மாகாண சபைகள் கலைக்கப்படக்கூடும். அதன்பின் புதிய அதிகார கட்டமைப்பிற்கான ஒரு தேர்தல் நடைபெறக் கூடும். அத் தேர்தலில் விக்கினேஸ்வரனுக்கு தமிழரசுக்கட்சி இடம் கொடுக்காது. என்பது ஒரு பரவலான ஊகம். விக்னேஸ்வரனும் அப்படித்தான் நம்புவதாகத் தெரிகிறது. இது தொடர்பாக அண்மையில் கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ...

Read More »

நல்லிணக்கபுரம்? – நிலாந்தன்

யாழ் கீரிமலைப் பகுதியில் 100 வீட்டுத்திட்டம் ஒன்றை கடந்த வாரம் அரசுத்தலைவர் மைத்திரி பொது மக்களிடம் கையளித்துள்ளார். ராணுவத்தின் பொறியியற் பிரிவின் ஒத்துழைப்போடு கட்டப்பட்ட இந்த நூறு வீட்டுத்திட்டத்திற்கு நல்லிணக்கபுரம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த வீடுகளின் உட்சுவர்களில் அரசுத் தலைவரின் படமும் குறிப்பிட்ட படைப்பிரிவின் படமும் தொங்க விடப்பட்டுள்ளன இவ்வீட்டுத்திட்டம் தொடர்பில் அரசுத் தலைவரின் ஊடகப்பிரிவு ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com