சற்று முன்
Home / செய்திகள் / இலங்கையில் எரிபொருள்களின் விலைகள் அதிகரிப்பு

இலங்கையில் எரிபொருள்களின் விலைகள் அதிகரிப்பு

இன்று (06) முதல் அமுலாகும் வகையில், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை இந்தியன் ஒயில் நிறுவனம், ஆகியன இவ்வாறு எரிபொருள் விலைகளை அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய
CPC – இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்
பெற்றோல் 92 – ரூபா 137 இலிருந்து ரூபா 145 ஆக ரூபா 8 இனாலும்
பெற்றோல் 95 – ரூபா 148 இலிருந்து ரூபா 155 ஆக ரூபா 7 இனாலும்
டீசல் – ரூபா 109 இலிருந்து 118 ஆக ரூபா 9 இனாலும்
சுப்பர் டீசல் – ரூபா 119 இலிருந்து ரூபா 129 ஆக ரூபா 10 இனாலும் அதிகரித்துள்ளது.

IOC – இந்தியன் ஒயில் நிறுவனம்
பெற்றோல் 92 – ரூபா 137 இலிருந்து ரூபா 146 ஆக ரூபா 9 இனாலும்
பெற்றோல் 95 – ரூபா 151 இலிருந்து ரூபா 158 ஆக ரூபா 7 இனாலும்
டீசல் – ரூபா 111 இலிருந்து ரூபா 118 ஆக ரூபா 7 இனாலும்
சுப்பர் டீசல் – ரூபா 119 இலிருந்து ரூபா 129 ஆக ரூபா 10 இனாலும் அதிகரித்துள்ளது.

உலகச் சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்படும் மாற்றத்திற்கமைய, எரிபொருள் விலைகள் இரு மாதங்களுக்கொருமுறை மீளாய்வு செய்து அதன் பிரகாரம் விலைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தும் எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய, எரிபொருள் விலைகளை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய கடந்த மே மாதம், முதல் முறையாக எரிபொருள் விலைச்சூத்திரத்திற்கு அமைய எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நிதியமைச்சினால் முன்வைக்கப்பட்டுள்ள குறித்த யோசனைக்கு அமைய, சிங்கப்பூர் எரிபொருள் விலைச் சூத்திரத்தைப் பயன்படுத்தி உலகச் சந்தை விலைகளுக்கேற்ப விலைகளில் அதிகரிப்பு அல்லது வீழ்ச்சிக்கு ஏற்ப, எரிபொருள் விலைகள் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மீளாய்வு செய்யப்படும் என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com