சற்று முன்
Home / செய்திகள் / கோவிட் 19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தின் செயற்பாடுகள், நிறுத்தம்.!

கோவிட் 19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தின் செயற்பாடுகள், நிறுத்தம்.!

கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் ஸ்தாபிக்கப்பட்ட இடுகம கோவிட் 19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தின் செயற்பாடுகள், நிறுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்துக்கான இலங்கை வங்கியின் கணக்கு இலக்கமான 85737373, அக்டோபர் 18 ஆம் திகதி முதல் மூடப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தின் செயலாளர் தாரக லியனபத்திரன, பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார்.

எனவே இனிமேல் இந்த நிதிக்கு பொதுமக்கள் நன்கொடை வழங்க வேண்டாம் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சமூக பாதுகாப்பு நிதி
கோவிட்-19 சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு நிதிக்கு மொத்தம் 2,207,164,785.58 (இரண்டு பில்லியன் இருநூற்று ஏழு மில்லியன் நூற்று அறுபத்து நான்காயிரம், எழுநூற்று எண்பத்தைந்து மற்றும் ஐம்பத்தெட்டு சதம்) நன்கொடைகள் கிடைத்துள்ளன.

இந்தத் தொகையில் 1,997,569,456.56 (ஒரு பில்லியன், தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஏழு மில்லியன், ஐந்நூற்று அறுபத்து ஒன்பதாயிரத்து, நானூற்று ஐம்பத்தாறு ரூபாய் மற்றும் ஐம்பத்தாறு சதம்.) கோவிட் செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை 2022, அக்டோபர் 18, நிலவரப்படி, கோவிட் நிதியில் மீதமுள்ள தொகை 216,877,431.05 (இருநூற்று பதினாறு மில்லியன், எட்டு இலட்சத்து எழுபத்தேழாயிரத்து, நானூற்று முப்பத்தொரு ரூபா ஐந்து சதம்;), இது சத்திரசிகிச்சை மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குவதற்காக ஜனாதிபதி நிதியத்தில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக சமூக பாதுகாப்பு நிதியத்தின் செயலாளர் தாரக லியனபத்திரன தெரிவித்துள்ளார்.

About Mayoorathi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

பொலிஸ் அதிகாரம் இல்லை – 13 மைனஸ் வழங்க ரணில் தீர்மானம்

பொலிஸ் அதிகாரங்கள் இல்லாமல் காணி அதிகாரங்களோடு மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com