வெளிநோயாளர் பிரிவில் நடத்தப்படும் கிளினிக் நடவடிக்கைகளை ஒழுங்கான முறையில் முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் மருத்துவமனை இயக்குநர் விஷேட வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் வைத்தியசாலைக்கு சமூகமளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உரிய முறையில் வைத்திய சேவைகளை முன்னெடுக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைகள் மற்றும் ஏனைய நடவடிக்கைகள் சிரமங்களுக்கு மத்தியிலேயே முன்னெடுக்கப்படுகிறது. எதிர்காலத்தில் இந்நிலை மேலும் மோசமாகும். சிறுவர்களுக்கான மருந்துகளுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.