சர்வதேச சதுரங்க தொடரில் 2ம் இடம் பிடித்தார் இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா. உலகின் சிறந்த வீரர்கள் 16 பேர் பங்கேற்கும் ‘மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் செஸ் டூர் தொடரின்’ செஸ்ஸபல் மாஸ்டர்ஸ் ஆன்லைன் சதுரங்கப் போட்டி பிப்ரவரி மாதம் தொடங்கியது.
இந்தியா சார்பில் பங்கேற்றுள்ள தமிழக வீரர் பிரக்ஞானந்தா (16 வயது) அரையிறுதிக்கு முன்னேறினார். அதில் நெதர்லாந்தைச் சேர்ந்த அனீஷ் கிரி உடன் மோதினார். இருவரும் விடாப்பிடியாகப் போராடியதால் ஆட்டம் 2-2 என்ற கணக்கில் டிரா ஆனது. அதனால் வெற்றியாளரை தீர்மானிக்க டை பிரேக்கர் கடைபிடிக்கப்பட்டது. அதில் பிரக்ஞானந்தா 1.5 – 0.5 என்ற புள்ளி கணக்கில் வென்று இறுதி ஆட்டத்துக்கு முன்னேறினார். பைனலில் அவர் உலகின் 2ம் நிலை வீரரான டிங் லிரெனை (சீனா) எதிர்கொண்டார். இறுதிப் போட்டி 2 நாட்களாக நடைபெற்றது.
இறுதிப் போட்டியின் முதல் நாளான நேற்று உலகின் நம்பர் 2 செஸ் வீரர் டிங் லிங்கிரனிடம் தோல்வி அடைந்து இருந்த பிரக்ஞானந்தா இரண்டாம் நாள் போட்டியில் வெற்றி பெற்று டை பிரேக்கர் முறைக்கு எடுத்து சென்றார்.இறுதியாக டை பிரேக்கர் முறையில் வெற்றி வாய்ப்பில் இருந்தும் ஒரு தவறான நகர்த்தலால் பிரக்ஞானந்தா தோல்வியை சந்தித்தார். இதனால் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா சர்வதேச செஸ் தொடரில் 2ம் இடம் பிடித்தார்.
