கடவுசீட்டு பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு குற்றசாட்டுகளில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட இலங்கையை சேர்ந்தவர்களே திருச்சி மத்திய சிறையில் உண்ணாவிரதப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இவர்கள் கைது செய்யப்பட்ட போதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இன்றுடன் மூன்றாவது நாளாக இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
