பிரான்ஸில் நடக்கும் ‘கேன்ஸ்’ திரைப்பட விழாவுக்கு சென்ற, ‘பாலிவுட்’ நடிகை பூஜா ஹெக்டேயின் சூட்கேஸ் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது. ஐரோப்பிய நாடான பிரான்ஸின் கேன்ஸ் நகரில் சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது.
இதில்,இந்திய நாட்டின் பல சினிமா பிரபலங்கள் சென்றுள்ளனர். நடிகை பூஜா ஹெக்டேவும் சென்றுள்ளார். இங்கு, பூஜாவின் உடைகள் இருந்த சூட்கேஸ் காணாமல் போனது.ஆனால், அவரது ‘மேக்கப்’ சாதனங்கள் மற்றும் நகைகள் இருந்த பெட்டிகள் இருந்துள்ளன.

இதுகுறித்து, விசாரணை நடந்து வருகிறது.பூஜா ஹெக்டே, ஹிந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு படங்களிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து உள்ளார்.